Quantum Film Factory R.K.வித்யாதரன் சார்பில், K. மஞ்சு தயாரிப்பில், R.K.வித்யாதரன் இயக்கத்தில், யோகி பாபு ,பூமிகா சாவ்லா,கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் (பக்ஸ்), சாம்ஸ், மன்மதன் , நிழல்கள் ரவி, ஆர்.கே வித்யாதரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஸ்கூல்.
சிட்டியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பிடிக்கிறது. நன்கு படிக்கும் மாணவர்களை கௌரவ படுத்தியும், படிப்பில் தோல்வியடையும் மாணவ மாணவியர்களை அனைவர் மத்தியிலும் அவமானப்படுத்துகிறார் பகவதி பெருமாள்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை எழுதுகிறார். அதனை பள்ளி நூலகத்திலும் வைக்கிறார்.
அந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் கே எஸ் ரவிக்குமார் வருகிறார்.
இன்ஸ்பெக்டர் கே எஸ் ரவிக்குமாரின் மகனும் அதே பள்ளியில் படிக்கிறார். போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் சமயத்திலும் சில மரணங்கள் ஏற்படுகிறது.
அந்தப் பள்ளியில் சில கெட்ட அமானுஷ்யங்கள் சுற்றி வருகின்றன. அந்த அமானுஷ்ய சக்தியை விரட்டுவதற்காக பள்ளிக்குள் வருகிறார் ஆர்.கே வித்யாதரன்.
ஒரு சூழ்நிலையில், கே எஸ் ரவிக்குமாரின் மகனும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.
அந்த அமானுஷயங்களை வரவைத்து எதற்காக இப்படி செய்கிறார்கள், என்று கேட்க முயற்சிக்கிறார் ஆர்.கே வித்யாதரன்.
இந்த சமயத்தில் பள்ளியிலிருந்து ரிசைன் செய்த ஆசிரியர்களான பூமிக்காவும் யோகி பாபுவும் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் அந்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகின்றன.
எதற்காக அந்த அமானுஷ்ய சக்திகள் பள்ளிக்குள் வந்தன? பள்ளியில் ஏற்பட்ட மர்மமான மரணங்களுக்கு காரணம் என்ன? பூமிக்காவிற்கும் யோகி பாபுவிற்கும் அந்தப் பள்ளிக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விகளுக்கான பதிலும், வெற்றியும் தோல்வியும் மட்டுமே வாழ்க்கை இல்லை அதை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கும் படமே ஸ்கூல்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, வசனம் : R.K. வித்யாதரன்
இசை மற்றும் பாடல்கள் : இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங் : ராகவ் அர்ஸ்
கலை : ஶ்ரீதர்ஸ்
கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதாவிளம்பர வடிவமைப்பு : சதீஷ் J
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு : K. மஞ்சு
தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன்.