டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் விமர்சனம்

ஆர்யா தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட்”

சினிமா விமர்சகராக இருக்கும் சந்தானம் திரைக்கு வரும் அனைத்து படங்களையும் விமர்சனம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். இவரின் அப்பாவாக நிழல் ரவி அம்மாவாக கஸ்தூரி தங்கையாக யாஷிகா ஆனந்த் காதலியாக கீர்த்திகா திவாரி ஆகியோர் இருக்கிறார்கள்.

சந்தானத்திற்கு பார்சல் ஒன்று வருகிறது அந்த பார்சலில் டிக்கெட் அனுப்பப்பட்டு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க வருமாறு அழைப்பு இருக்கிறது. 

அந்த திரையரங்கிற்கு சென்று பார்க்கும் பொழுது அது பழைய திரையரங்கம் என்றும் ஏதோ தவறாக இருக்கிறது என்று நினைத்து அங்கிருந்து வந்து விடுகிறார் சந்தானம். ஆனால் அவர் வருவதற்குள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அந்த தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விடுகிறார்கள். 

திரையரங்கு பார்க்க சூப்பராகவும் அழகாகவும் காட்சியளிப்பதால் இவர்கள் படம் பார்ப்பதற்காக உள்ளே சென்று விடுகிறார்கள். 

அங்கு ஆவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வராகவன் சினிமாவை தப்பாக விமர்சனம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக சந்தானத்தின் குடும்பத்தை ஒரு பிரம்மாண்டமான அழகிய கப்பலுக்குள் கொண்டு போய் விடுகிறார். 

அவர்கள் அங்கு தங்களை யார் என்று அடையாளம் தெரியாதவர்கள் போல் இருக்கிறார்கள். ஏழல் ரவி கப்பலின் கேப்டனாகவும் கஸ்தூரி திருடிய ஆகவும் மார்டன் உடையில் கிளாமராக யாஷிகா ஆனந்தும் இருக்கிறார்கள்.

ஆவியாக இருக்கும் செல்வராகவன் சந்தானத்திடம் உன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சாகப் போகிறார்கள் என்று சொல்கிறார்.

சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? தன் காதலியையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட்” படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ஆர்யா 

இயக்கம் : பிரேம் ஆனந்த்

ஒளிப்பதிவு : தீபக் குமார்

எடிட்டிங் : பரத் விக்ரமன்

இசையை : ஆஃப்ரோ 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்