ஜோரா கை தட்டுங்க விமர்சனம்

வினீஷ் மில்லேனியம் இயக்கத்தில், யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பெரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜகாஷன், நைரா நிஹர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜோரா கையத்தட்டுங்க”.

யோகி பாபு ஒரு பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனாக இருக்கிறார். அப்பா இறந்த பிறகு அவரும் மேஜிக் தொழிலுக்கு வந்து ஒரு மேஜிக்மேனகா ஆகி விடுகிறார்.

ஆனால் யோகி பாபுவின் மேஜிக் மக்களுக்கு பிடிக்காததால் அவர் மேஜிக் செய்யும் இடங்களில் எல்லாம் அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார். 

இதனால் எப்போதும் ஒரு விரக்த்தியான மனநிலையிலேயே இருந்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு சிலர் சூழ்ச்சியால் ரவுடிகளால் தாக்கப்பட்டு ஒரு கையை இழந்து மேஜிக்கை தொடர முடியாமல் தவிக்கிறார். 

ஒரு சமயத்தில் யோகி பாபுவின் கையை வெட்டிய ரவுடிகள் ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து விடுகின்றனர். அதனால் அவர்களை தன்னுடைய மேஜிக் கலையால் அவர்களை பழிவாங்க நினைக்கிறார். 

யோகி பாபு அந்த சிறுமியின் கொலை காரணமானவர்களை எப்படி பழிவாங்கினார்? அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதே ஜோரா கை தட்டுங்க படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : எஸ்.என் அருணகிரி

பின்னணி இசை : ஜித்தின் கே ரோஷன் ஒளிப்பதிவாளர் : மது அம்பாட்

எடிட்டர் : சாபு ஜோசப்

பாடல் வரிகள் : மணி அமுதவன்

ஸ்டண்ட் : மிரட்டல் செல்வா

நடனம் : விஜய் சிவசங்கர்

கலை : எஸ் அய்யப்பன்

இணை இயக்குனர் : ஸ்ரீனிவாஸ்

வண்ணம் : ரகு ராம்

ஸ்டில்ஸ் : மணிவண்ணன்

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் (எஸ்2 மீடியா)