மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் புதிய மனை பிரிவின் விற்பனை துவக்க விழா

16 வருடங்களுக்கு மேலாக ரியல் எஸ்டேட் துறையில் நிலைத்திருப்பது மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் நண்பகத்தன்மையை வாடிக்கையாளர்களிடம் மேலும் உயர்த்துவதாக திரைப்பட இயக்குனர், ஆர் கே செல்வமணி அவர்கள் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் புதிய மனை பிரிவின் விற்பனையின் துவக்க விழாவில் தெரிவித்தார்…

ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சூரஞ்சேரியில் ரெயின்போ கார்டன் என்ற பெயரில் புதிய வீட்டுமனை பிரிவின் இரண்டாம் பாகத்தின் விற்பனையின் துவக்க விழா நடைபெற்றது…

இதில் திரைப்பட இயக்குனர் ஆர் கே செல்வமணி மற்றும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு,மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்..

முன்னதாக மனைப்பிரிவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது…

பின்னர் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் இயக்குனர் ஆர் கே செல்வமணி ஆகியோருக்கு,மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்…

புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மனைப்பிரிவில் மனைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் மற்றும் மனைகளை விற்பனை செய்த விற்பனை முகவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்….

நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் ஆர் கே செல்வமணி கூறுகையில்,

16 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இந்த துறையில் நிலைத்து நிற்பது கடினமான ஒன்றாகும் எனவும், இதனால் மனை வாங்கும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை இந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது என்றார்,

மேலும் இந்த துவக்க விழா குறித்து பேசிய நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கூறுகையில்,

ரெயின்போ கார்டன் மனை பிரிவின் துவக்க விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாகவும்,பல வருடங்களாக தனக்கு நெருங்கிய நண்பராக திகழும், மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மனைப்பிரிவில் மனை வாங்கி தங்களின் சொந்த வீட்டின் கனவினை வாடிக்கையாளர்கள் நினைவாக்கி கொள்ளலாம் என்றார்…

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் கூறுகையில்,

சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமான மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம், ஆவடி நகராட்சிக்குட்பட்ட சூரஞ்சேரியில் ரெயின்போ கார்டன் ரெசிடென்சியல் டவுன்ஷிப் , கண்ணம்பாளையம் வர்ஷாகார்டன் மற்றும் ஆர்ஆர் செந்தூர் பாரடைஸ் ஆகிய மனைப்பிரிவுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது.

தற்போது ஆவடி சூரஞ்சேரியில் ரெயின்போ கார்டன் வீட்டுமனை பிரிவின் இரண்டாம் பாகத்தில், புதிய வீட்டு மனைப்பிரிவுகள் விற்பனையை தொடக்கியிருக்கிறோம் எனவும் இந்த மனைப்பிரிவு ஆவடி ரயில் நிலையம் அருகில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளதாகவும் . மேலும் ஆவடி பேருந்து நிலையம், சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அன்னனூர் இரயில்நிலையம், மிக அருகில் உள்ளதாகவும், மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி , வேலம்ம்மாள் சி பி எஸ் இ பள்ளி , சுதர்ஷன் சி பி எஸ் இ பள்ளிகள் 5 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளன என்றார்…

பட்டாபிராம் டைடல் பார்க், அம்பத்தூர் ஐ.டி பார்க் மற்றும் விரைவான பயணத்திற்கான 400 அடி வெளிவட்டச் சாலைகள் 15 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது இம்மனையின் சிறப்பம்சங்களாகும் எனக் கூறிய அவர்,

மேலும் 28 மனைப்பிரிவுகளுடன் 800 சதுர அடியிலிருந்து 1600 சதுரஅடிகள் வரையில் சிஎம்டிஏ மற்றும் ரேரா அங்கீகாரத்துடன் சுவையான நிலத்தடி நீர், தார்ச்சாலை, உடனடி மின் வசதி, சூரிய மின்சக்தி தெருவிளக்குகள், பாதுகாப்பான சுற்றுச்சுவருடன் கூடிய கேட் என பல்வேறு வசதிகளை செய்து தருகிறது எனவும், இம்மனைப் பிரிவு சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். மனை வாங்குவோருக்கு 80% வரை வங்கி கடன் வசதி செய்து தரப்படும் எனவும்,வீட்டுமனை பிரிவுகளை
மிக குறைந்த விலையில் மெட்ராஸ் ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் வழங்குகிறது எனவும், கடந்த 15 வருடங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்புடன் செயல்பட்டுவரும் எங்கள் நிறுவனத்தின் சேவையை அனுபவித்து நிரந்தர வாடிக்கையாளர்களாக பலர் உள்ளனர் என்றார்…