சுமோ விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், S. P. ஹோசிமின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த்,யோஷினோரி தாஷிரோ, விடிவி கணேஷ், யோகிபாபு, சதிஷ், ‘VTV’ கணேஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன், ஸ்ரீநாத், பெசன்ட் ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சுமோ”.

வி டிவி கணேஷ் குடித்துவிட்டு காரில் வரும்போது போலீஸிடம் மாட்டுகிறார். அப்போது அவரது காரை சோதனையிடும் போது அந்த காரில் ஒரு பெட்டி இருக்கிறது. அந்த பெட்டி என்ன என்று போலீசார் கேட்க அதனை காட்ட முடியாது என்று சொல்கிறார் அதற்கு ஒரு கதை இருக்கிறது என்று சொல்லி அந்த கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். 

வி டிவி கணேஷ் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார் அதனுடன் சேர்ந்து கடலில் அலை சறுக்கு விளையாட்டு டைலராக இருக்கிறார் அவருடன் நாயகன் மிர்ச்சி சிவாவும் இருந்து வருகிறார். 

ஒருநாள் அலைசருக்கு செய்வதற்காக மிர்ச்சி சிவா போகும் போது கடலோரத்தில் ஜப்பானில் சேர்ந்த யோஷினோரி தாஷிரோ மயக்க நிலையில் கிடக்கிறார்.

அவரை பார்த்ததும் அவரை காப்பாற்றி அவருடனே வைத்துக் கொள்கிறார்  சிவா. தான் உயிர் பிழைக்க காரணம் சிவா தான் என்று அவருடனே இருக்கிறார். யோஷினோரி தாஷிரோ அடிபட்டத்தில் பழைய நினைவுகள் மறந்து சின்ன குழந்தை போல் நடந்து கொள்கிறார். 

யோஷினோரி தாஷிரோ யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடித்து அவரை அனுப்ப வேண்டும் என்று சிவா முடிவு செய்கிறார். அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது யோஷினோரி தாஷிரோ ஜப்பானை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது.

சிவா, யோஷினோரி தாஷிரோயை ஜப்பானில் கொண்டு போய் சேர்த்தாரா இல்லையா என்பதே சுமோ படத்தோட மீதிக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே கணேஷ்

இயக்கம் : S. P. ஹோசிமின்

வசனம் மற்றும் திரைக்கதை : மிர்ச்சி சிவா

ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன் செய்ய 

இசை : நிவாஸ் கே பிரசன்னா 

படத்தொகுப்பு : பிரவின் கே எல் 

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது