மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள்… இவை அனைத்தும் இணையும் போது, இசை நாயகர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது. கூட மேல கூட வச்சு, கண்கள் இரண்டால் போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு மர்ம மாயம் – மையல் படத்தில் இருந்து வெளிவந்துள்ள “என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச”.
இந்த சுகாத இசை அனுபவத்தை இசையமைப்பாளர் அமர்கீத் தனது நுட்பமான இசை பாணியால் உயிரூட்டுகிறார். பாடலுக்குச் சுவை கூட்டும் விதமாக, சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் நேரடியாகப் பதிய செய்கின்றன. மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஏகாதசி எழுதிய வரிகள், எளிமை மற்றும் அழகிய உணர்வுகளின் இணைவு. அவரது வார்த்தைகள், நம்மை அசைவற்றுப் பார்த்து உணர்ச்சிகளை அள்ளி தருகின்றன.
மையல் – உணர்ச்சிகளால் நெஞ்சை தொடும் ஓர் யதார்த்தக் கதை. இயக்குனர் ஏ.பி.ஜி. ஏழுமலை,கதை திரைக்கதை வசனம் ஜெயமோகன். சேது மற்றும் சம்ரித்தி தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அனுபமா விக்ரம் சிங், ஆர். வேணுகோபால், மற்றும் ஐகான் சினி கிரியேஷன் எல் எல் பி தயாரிக்கின்றனர்.
“என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச” தற்போது யூட்யூப் மற்றும் அனைத்து முக்கிய இசை தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.
படத்தின் பாடல் வெளியீடு, ட்ரெய்லர் மற்றும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடும் குறித்து, படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.