சக்கரவர்த்தி ராமச்சந்திரா & எஸ் சசிகாந்த் தயாரிப்பில், சசிகாந்த் இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், ஆகியோர் நடிப்பில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள படம் டெஸ்ட்.
சித்தார்த் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கிறார். அந்த அணியில் இருந்து அவரை விலக்கிவிட்டு வேறொருவருக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது.
அதனால் சித்தார்த் அணியிலிருந்து விளக்குகிறேன் என்று சொல்ல சொல்கிறது கிரிக்கெட் வாரியம்.
ஆனால் சித்தார்த்தோ தோல்வி அடைந்ததோடு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பாமல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு தன்னுடைய திறமையை காட்டிவிட்டு பிறகு விலக வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆகையால் அந்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.
விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்று நினைக்கும் மாதவன் தண்ணீரில் இருந்து எரிபொருளைக் கொண்டு வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கிறார்.
அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய முயற்சி ஒவ்வொருமுரையும் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது.
மாதவன் தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் பெறுவதற்காக ஒருவரிடம் 50 லட்சம் கடனாக பெற அந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்.
அவருக்கு மனைவியாக வரும் நயன்தாரா மாதவனுக்கு உறுதுணையாகவே இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கணவன் குழந்தை என்று வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் அதற்கான மருத்துவ சிகிச்சையில் ஈடுபட முயற்சி செய்கிறார்கள்.
சித்தார்த் தன்னுடைய வெற்றியை நிரூபித்தாரா? இல்லையா? நயன்தாராவின் குழந்தை கனவு நிறைவேறியதா? இல்லையா? மாதவன் தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரத்தை வாங்கினாரா? இல்லையா? என்பதே டெஸ்ட் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : சக்கரவர்த்தி ராமச்சந்திரா & எஸ் சசிகாந்த்
இயக்கம் : சசிகாந்த்
இசை : சக்தி ஸ்ரீ கோபாலன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்