“EMI (மாத்தவணை)” விமர்சனம்

மல்லையன் தயாரிப்பில், சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில், சதாசிவம் சின்னராஜ், சாய் தான்யா, பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், OAK சுந்தர், லொள்ளுசபா, மனோகர், TKS, செந்தி குமாரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “EMI (மாதத்தவணை)”

சதாசிவம் சின்னராஜ், சாய் தன்யாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். சாய் தன்யாவை இம்ப்ரஸ் செய்வதற்காக இதில் இருசக்கர வாகனத்தை EMI-யில் வாங்க ஆரம்பிக்கிறார். 

சாய் தன்யாவிடம் காதலை சொல்லி சம்மதம் பெற்று இருவரும் திருமணம் செய்கிறார்கள். திருமணத்தன்று காரை EMI-யில் வாங்குகிறார். 

திருமணம் முடிந்து இருவரும் நல்ல நிலையில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் என்று சதாசிவம் சின்ராஜிற்கு வேலை இல்லாமல் போகிறது.

இதனால் வருமானம் இல்லாததால் இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றிற்கு மாதத் தவணை கட்ட முடியாமல் தத்தளிக்கிறார். 

இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட குடிக்கு அடிமை ஆகிறார். பிரச்சனைகள் மேலும் அதிகரிக்க சாய் தன்யா சதாசிவத்தை விட்டு பிரிய  முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரை பின்தொடர்ந்து சேர்ந்து வாழ்வோம் என்று அழைக்கிறார்.

சதாசிவம், சாய் தன்யா இருவரும் சேர்ந்து சேர்ந்தார்களா? இல்லையா? மாதத் தவணை பிரச்சனையிலிருந்து வெளிவந்தார்களா?  இல்லையா? என்பதே EMI (மாத தவணை) படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் :  சதாசிவம் சின்னராஜ்.

தயாரிப்பு : மல்லையன்

சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் 

ஒளிப்பதிவு : பிரான்சிஸ்,

பாடல்கள் : பேரரசு, விவேக்

எடிட்டர் : R. ராமர்

நடனம் : தீனா, சுரேஷ் சித்

ஸ்டண்ட் : மிராக்கில் மைக்கேல் 

தயாரிப்பு மேற்பார்வை : தேக்கமலை பாலாஜி

மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்