வருணன் விமர்சனம்

கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், ஜெயவேல் முருகன் இயக்கத்தில், ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த், கேப்ரில்லா, ஹரிபிரியா, ஷங்கர் நாக் விஜயன், ப்ரியதர்ஷன், ஜீவா ரவி, மகேஷ்வரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வருணன்.

வடசென்னையில் வீட்டிற்கு தண்ணீர் கேன் விற்பனை செய்ய இரண்டு பிரிவினர்களிடையே எப்பொழுதும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

ஒருபுறம் ராதாரவி மறுபுறம் சரண்ராஜ் இருவரும் அந்த ஏரியாவில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார்கள்.

இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் இவர்களிடம் வேலை செய்யும் துஷ்யனுக்கும், சங்கரநாத் விஜயனுக்கும் ஏரியா பிரிப்பதில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. 

இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை பயன்படுத்தி போலீஸ் அதிகாரி தண்ணீர் கேன் பிசினஸில் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். 

இதனால் இரு பிரிவிற்கும் சிறு பிரச்சனைகளாக இருந்து வந்தவை பெரிய பகையாக மாறுகிறது அதன் பிறகு நடந்தது என்ன என்பதே வருணன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம்: ஜெயவேல் முருகன்

ஒளிப்பதிவு: ஸ்ரீராம சந்தோஷ்

இசை: போபோ ஷாஷி

தயாரிப்பு: கார்த்திக் ஸ்ரீதரன்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்