சிக்னேச்சர் ப்ரொடக்ஷன்ஸ் & ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் & எல் கேத்தரின் சோபா அண்ட் லெனின் தயாரிப்பில், பிரிட்டோ ஜே பி இயக்கத்தில், பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி, யோகி பாபு, வடிவுக்கரசி, ஆதிரா துளசி, கனிகா, அறிவுமணி, சுரேஷ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், மைன் கோபி, காவியா, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நிறம் மாறும் உலகில்.
லவ்லி சந்திரசேகர் அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதனராக வரும் யோகி பாபுவை சந்திக்கிறார்.
லவ்லின் நிலையை யோகி பாபு புரிந்து கொண்டு அம்மா என் என்பவர் ஒவ்வொரு வாழ்க்கையிலும் எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு புரிய வைக்கும் வகையில் ஒரு நான்கு கதைகளை சொல்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து மும்பையில் மிகப்பெரும் தாதாவாக இருக்கிறார் நட்டி. தன்னுடைய சிறுவயதில் இருந்து தன் அம்மா பாலியல் தொழில் செய்து தன்னை வளர்த்ததும், அம்மாவின் அன்பு கிடைக்கவில்லை என்றும் தினமும் ஏங்கிக் கொண்டிருக்கிறார் நட்டி. தன்னுடைய மகனை கொன்ற நட்டியை கொலை செய்ய வேண்டும் என்று வெறியோடு அவரை தேடி வருகிறார் சுரேஷ் மேனன். கிராமத்திலிருந்து ரிஷிகாந்து தன்னுடைய வாய் பேச முடியாத காதலியை அழைத்துக் கொண்டு மும்பைக்கு வருகிறார். இவர் சுரேஷ் மேனன் கூட்டத்தில் சிக்கிக் கொள்ள, நட்டியை கொலை செய்ய ரிஷிகாத்தை எப்படி பயன்படுத்துகிறார் என்பது முதல் கதையோடு மீதிக்கதை.
நாயகன் ரியோ மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மா ஆதிராவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
அம்மா ஆதிரா மகனை கலெக்டராக பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்து வருகிறார் ரியோவின் நண்பராக விக்னேஷ் காந்த் இருக்கிறார். ஒரு நாள் அம்மா ஆதிரா மயக்கம் போட்டு விழ மருத்துவமனையில் சேர்கிறார் ரியோ.
டாக்டர் ஆதிராவுக்கு கேன்சர் இருப்பதாகவும் அதனை சரி செய்ய பல லட்சம் வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கும் ரியோ பணத்திற்காக அலைகிறார்.
அந்த ஏரியாவில் ரவுடியாக இருக்கும் மைன் கோபியிடம் மைம் கோபியிடம் பணம் கேட்கிறார். மைம் கோபியோ நான் பணம் தருகிறேன் ஆனால் இரண்டு நபர்களை கடத்தி எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ரியோ அம்மாவின் லட்சியத்திற்காக அந்த வேலையை செய்யாமல் இருக்கிறாரா? அல்லது அம்மாவின் உயிரை காப்பாற்ற அந்த வேலையை செய்கிறாரா? என்பதே இரண்டாவது கதையோடு மீதிக்கதை.
கிராமத்தில் இருக்கும் கணவன் மனைவியான பாரதிராஜாவுக்கும் வடிவுக்கரசிக்கும் இரண்டு மகன்கள். மாதம் மாதம் 1ம் தேதி அன்று மகன்கள் அனுப்பும் பணத்திற்காக தபால் நிலையத்தில் சென்று காத்திருக்கிறார் பாரதிராஜா.
ஆனால் மகன்களோ அவர்களின் மீது பாசமும் இல்லாமல் பணமும் அனுப்பாமல் மரியாதையும் கொடுக்காமல் நடத்தி வருகின்றன இதனால் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் தங்களுடைய கடந்த காலத்தை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர் மகன்களால் கஷ்டப்படும் இவர்களின் நிலை என்ன ஆனது என்பதே மூன்றாவது கதையோட மீதிக்கதை.
கணவன் இறந்து ஒரு வருடம் ஆன சூழ்நிலையில், தன்னுடைய மகன் மருமகளால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் துளசி. முதியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்த துளசி, ஒரு ஆட்டோவில் எரி பயணிக்கிறார் அந்த ஆட்டோவின் ஓட்டுனராக இருப்பவர் சாண்டி. சாண்டிக்கோ பெற்றோரோ அல்லது மற்ற உறவினர்களோ யாரும் இல்லை. யாரும் இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கையை எவ்வாறு கையாண்டார்கள் என்பதே நான்காவது கதையோட மீதிகதை
பெற்றோர் யாருமில்லாத துணைக்கு யாரும் இல்லாத தனி ஒருவனாய் தனது வாழ்க்கையை ஆட்டோ ஓட்டி பார்த்துக் கொள்ளும் சாண்டியின் ஆட்டோவில் ஏறுகிறார் துளசி. யாரும் இல்லாதவர்களாய் இருக்கும் இவர்கள், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதே நான்காவது கதையின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : சிக்னேச்சர் ப்ரொடக்ஷன்ஸ் & ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் & எல் கேத்தரின் சோபா அண்ட் லெனின்
இயக்கம் : பிரிட்டோ ஜே பி
இசை : தேவ் பிரகாஷ் ரீகன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்