கிங்ஸ்டன் விமர்சனம் 3/5

ஜி வி பிரகாஷ்குமார், உமேஷ் கே ஆர் பன்சால் மற்றும் பவானி ஸ்ரீ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், திவ்ய பாரதி, சேத்தன், அழகம் பெருமாள், குமரவேல், சாபுமோன், ஆண்டனி, ராஜேஷ் பாலசந்திரன், அருணாசலேஸ்வரன், ப்ரவீன், ஃப்யர் கார்த்திக் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிங்ஸ்டன்”.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தூவத்தூர் கிராமத்தில் 1980ல் மீன்பிடிப்பது மற்றும் கடல் அட்டை எடுப்பது இதுவே இவர்களின் தொழிலாக இருந்து வருகிறது. 

இப்படி மீன் பிடிப்பதற்கும் கடல் அட்டை எடுப்பதற்கும் செல்பவர்கள் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்குகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் எப்போதும் ஒரு சோகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த ஊரில் இருக்கும் பெண்களும் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்குகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் கடலில் இருக்கும் அமானுஷ்யம் தான் என்று அந்த கிராமத்து மக்கள் நம்பி தூவத்தூர் கிராமம் மீன் பிடிப்பதற்கான கிராமம் இல்லை என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. 

இந்தக் கதை அப்படியே 2024க்கு வருகிறது தாமஸ் என்கிற கடத்தல் காரனுக்கு எல்லா வேலையும் செய்து அவருடனே இருக்கிறார்  துவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜிவி பிரகாஷ். 

அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை எல்லை கடந்து கடத்தி‌ வேறு ஒரு நாட்டிற்கு போய் கொடுக்கும் வேலையைதான் செய்து வருகிறார் ஜி.வி பிரகாஷ்.

இப்படி போகும் ஒரு நேரத்தில் கடல் அட்டைக்குள் போதை பொருள் வைத்து கடத்தப்படுவதை கண்டறிந்த ஜீவி, தாமஸிடம் கேள்வி கேட்டு அவரை எதிர்க்க ஆரம்பிக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கிராமத்தில் இருக்கும் யாரும் உன்னிடம் வேலை செய்ய வர மாட்டார்கள் என்று கூறிவிட்டு சென்று விடுவதோடு மட்டுமல்லாமல், கடலுக்குள் சென்று கடலில் எந்த அமானுஷ்யமும் இல்லை என்பதை நிரூபிப்பதாக நண்பர்களுடன் கடலுக்குள் செல்கிறார். ஜீவிக்கு தெரியாமல் அவருடைய காதலியான திவ்யபாரதியும் கப்பலுக்குள் ஏறி விடுகிறார். 

அந்த ஐந்து பேரும் சேர்ந்து கடலுக்குள் இருக்கும் அமானுஷ்யத்தை கண்டுபிடித்தார்களா? இல்லையா? உண்மையில் கடலுக்குள் அமானுஷ்யம் இருக்கிறதா? இல்லையா? என்பதே கிங்ஸ்டன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : கமல் பிரகாஷ்

தயாரிப்பாளர்கள் : ஜி வி பிரகாஷ்குமார், உமேஷ் கே ஆர் பன்சால் மற்றும் பவானி ஸ்ரீ

ஒளிப்பதிவு : கோகுல் பினாய்

இசை : ஜிவி பிரகாஷ்குமார்

படத்தொகுப்பு : சான் லோகேஷ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்