ஜென்டில்வுமன் விமர்சனம் 3.5/5

கோமலா ஹரி பிக்சர்ஸ் & ஒன் ட்ராப் ஓசோன் பிக்சர்ஸ் சார்பில், கோமலா ஹரி, ஹரி பாஸ்கரன், பிஎன் நரேந்திர குமார் & லியோ லோகனே நேதாஜி தயாரிப்பில், ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா மரியநேசன், ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன் சுதேஷ், பிரபு தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஜென்டில்வுமன்.

 

சென்னையில் இருக்கும் அப்பார்ட்மெண்டில் லிஜோமோல் ஜோஸ் தன் தன் கணவர் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார் தனது கணவன் மீது எந்த அன்புடன் பாசத்துடன் இருக்கிறார். 

ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கணவனின்  கைப்பேசியை பார்க்க நேரிடுகிறது. அதன் மூலம் அதன் அவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது. என் கோபத்தில் கணவனை கொலை செய்து விடுகிறார். 

கணவரை கொலை செய்து விட்டு இரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து எந்தவித சலனமும், படபடப்பும் இல்லாமல் கணவனின் உடலை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்.

இந்த நிலையில் ஹரி கிருஷ்ணாவை தேடி அவருடைய காதலியான லாஸ்லியா, அவர் வீட்டிற்கு செல்கிறார்.‌ அங்கு அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் ஹரி கிருஷ்ணாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். விசாரணையை ஆரம்பிக்கும் காவல்துறை ஹரே கிருஷ்ணாவுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா?கணவரை கொலை செய்து விட்டு சாதாரணமாக இருக்கும் லிஜோமோலுக்கு தண்டனை கிடைத்ததா? இல்லையா? ஹரி கிருஷ்ணா காணவில்லை என்று புகார் கொடுத்துள்ள லாஸ்லியா என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் சந்தித்தார் என்பதே ஜென்டில்வுமன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் ‌: ஜோஷ்வா சேதுராமன்

இசை : கோவிந்த் வசந்தா

தயாரிப்பு : கோமலா ஹரி பிக்சர்ஸ் & ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ் – கோமலா ஹரி, ஹரி பாஸ்கரன், பி.என்.நரேந்திர குமார் & லியோ லோகனே நேதாஜி

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)