கூரன் விமர்சனம்

நிதின் வேமபட்டி இயக்கத்தில், எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், பாலாஜி சக்திவேல், கவிதா பாரதி, இந்திரஜா சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கூரன்.

கொடைக்கானல் உள்ள ஒரு சாலையில், ஒரு நாய் தனது குட்டியுடன் சாலையில் செல்லும்போது, கார் ஒன்று குட்டி நாய் மீது ஏற்றி அதனை கொன்றுவிட்டு காரும் நிற்காமல் போய்விடுகிறது.

அதனால் சோகத்தில் இருக்கும் அந்த தாய் நாய் இந்த விபத்துக்கு காரணமான கார் ஓட்டுபவரை தண்டிக்க சொல்லி நியாயம் கேட்டு காவல் நிலையம் செல்கிறது. 

ஆனால் அங்கு அந்தத் தாய் நாயின் வேதனையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. 

அந்த நாயோ அதனை விடாமல் தொடர்ந்து பிரபல வக்கீலாக இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரு கட்டத்தில் எஸ்ஏசி யும் அதனுடைய வலியையும் பிரச்சனையையும் புரிந்து கொள்கிறார். 

அந்த நாய்க்காக நீதிமன்றத்தில் எஸ்ஏசி வாதாட முன்வருகிறார். நாய்க்காக வாதாடி நாய்க்கு நீதி வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே கூரன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : நிதின் வேமபட்டி

இசை : சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு : மார்டின் தன்ராஜ்

மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்