வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், பா விஜய் இயக்கத்தில், அர்ஜூன், ஜீவா, ராஷி கண்ணா, எட்வர்ட், ரோகிணி, சார்லி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அகத்தியா.
நடிகர் ஜீவா ஆர்ட் டைரக்டராக ஆசைப்பட்டு தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து மிகப்பெரிய பங்களா போன்ற செட் ஒன்றை ஒரு படத்திற்காக தயார் செய்கிறார். ஆனால் படத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அந்த படம் ஆரம்பிப்பதற்குள்ளேயே நின்று விடுகின்றது இதனால் விரத்தியடையும் ஜீவா என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்.
ராஷி கண்ணாவோ அதே அரண்மனை “Scare House” ஆக மாற்றி நாம் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆலோசனை சொல்ல அதன்படி ராஷி கண்ணா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அதனை “Scare House” ஆக மாற்றுகிறார் ஜீவா.
பொதுமக்களுக்கு திகில் அனுபவத்தை கொடுக்கிறார். அதன் மூலம் பணமும் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.
அவர்கள் நினைத்தபடி நன்றாக போய்க் கொண்டிருக்கும் சமயத்தில், அந்த அரண்மனை செட்டிற்குள் உள்ளே சென்ற காதல் ஜோடியில் காதலன் மாயமாகி விட, பொதுமக்களுக்கு அந்த இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை என்று அந்த இடத்தை மூடச் சொல்கின்றனர் காவல்துறையினர்.
இதன் சோகம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வீட்டில் அம்மா ரோகிணி எலும்புருக்கி நோயால் படுத்த படுக்கையாக இருக்கிறார் அதனை நினைத்தும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில், அரண்மனை செட்டிற்கு கீழே ஒரு சுரங்கம் இருப்பதை பார்க்கிறார். அங்கே அவருக்கு பழைய வீடியோ மற்றும் சில பொருட்கள் கிடைக்கிறது அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ஜீவா.
அந்த வீடியோ கேசட்டை பார்க்கும் போது 1940களில் நடந்த விஷயங்கள் தெரிய வருகிறது. அங்கு அர்ஜுன் இருக்கிறார். அப்பொழுது என்ன நடந்தது? எதனால் இந்த இடத்தில் அமானுஷ்யங்கள் நடக்கிறது? அதற்கான காரணங்கள் என்ன? ஜீவாவிற்கும் அந்த இடத்திற்கும் என்ன சம்பந்தம்? ஜீவா தன்னுடைய அம்மாவின் நோயை குணப்படுத்தினாரா? இல்லையா? என்பதே அகத்தியா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : பா விஜய்
ஒளிப்பதிவு : தீபக் குமார் பதி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்