புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் பிரம்மா & சர்ஜூன் ஆகிய இருவரின் இயக்கத்தில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லா, சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கெளரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா, ஷிரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவானி பாஸ்கர், சாந்தினி தமிழரசன், அஸ்வினி நம்பியார் உருவாகி ப்ரைம் வீடியோவில் வெளிவந்திருக்கும் இணையத் தொடர் “சுழல் 2 – தி வோர்டெக்ஸ்”.
சுழல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை ஆரம்பமாகிறது, ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை செய்த குற்றத்திற்காக சிறை செல்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ்க்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார் லால்.
ரொம்ப நாட்களாக சென்று கொண்டிருக்கும் இந்த வழக்கில் ஓரிரு வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவிக்கிறார்.
சிறுவயதிலிருந்து லால் கதிரை படிக்க வைத்திருப்பதால் கதிர் லாலை தன் அப்பா போல் நினைக்கிறார். வாலும் கதிரை தன் மகன் போல்தான் நடத்துகிறார்.
திருவிழாவிற்காக லால், கதிரை தன்னுடைய ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அன்று இரவு லால் காட்டேஜ்க்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, நீயும் நாளை காலை அங்கு வா என்று சொல்லி சென்று விடுகிறார்.
மறுநாள், அந்த காட்டேஜ்க்கு சென்று கதிர் பார்க்கும் போது லால் கொலை செய்யபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் கதிர்.
லோக்கல் இன்ஸ்பெக்டரான சரவணனுக்கு
தகவல் தெரிவிக்க அவரும் அங்கு வருகிறார்.
அங்கு வரும் உயரதிகாரி வழக்கை கதிரே விசாரிக்கட்டும் என்று கூறி விடுகிறார்.
வழக்கு விசாரணை ஆரம்பிக்க, கொலை நடந்த இடத்தில் ஒரு பூட்டப்பட்ட அறையில் கையில் துப்பாக்கியோடு இருக்கும் கெளரி கிஷன் கைது செய்யப்படுகிறார்.
இந்த சூழலில், ஒரு சில நாட்களில் 7 பெண்கள் தான் தான் லாலை சுட்டுக் கொன்றேன் என்று சொல்லி வெவ்வேறு காவல்நிலையத்தில் சரணடைகின்றனர்.
எட்டு பெண்கள் லாலை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
லால் எதற்காக கொலை செய்யப்பட்டார்? எட்டு பெண்களும் தான்தான் கொலை செய்தேன் என்று சரணடைய காரணம் என்ன? கதிர் இந்த வழக்கை எப்படி விசாரித்து முடிவு கண்டார்? என்பதே சுழல் 2 – தி வோர்டெக்ஸ் தொடரின் மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : ஆபிரகாம் ஜோசப்
இசை: சாம் சி எஸ்
படத்தொகுப்பு : ரிச்சர்ட் கெவின்