டிராகன் விமர்சனம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கையடு லோகர், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி, தேனப்பன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டிராகன்”.

பள்ளியில் படிக்கும் போது நன்றாக படித்து கோல்ட் மெடல் வாங்கிய நல்ல ஸ்டுடென்ட் பிரதீப். 12 ஆம் வகுப்பு முடிந்ததும் தான் காதலித்த பெண்ணிடம் தன்னுடைய காதலை சொல்ல அந்த பெண்ணோ உண்ணலாம் நான் காதலிக்க மாட்டேன், ரௌடியாக இருப்பவனை தான் காதலிப்பேன் என்று சொல்கிறார்.

இதனால் மனமுடைந்து போன பிரதீப் இனி நல்லவனாக இருக்கப் போவதில்லை என்று கல்லூரியில் சேர்ந்ததும் ரவுடித்தனமாக சுற்ற வேண்டும் என்று கல்லூரியில் சேர்கிறார் அங்கு அனுபமா பரமேஸ்வரனை காதலிக்கிறார்.

கல்லூரியில் பிரச்சனை ஏற்பட்டு நிர்வாகத்தால் 46 அரியருடன் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார் பிரதீப்.

ஆனால் தன்னுடைய அப்பா அம்மாவிடமும் படிப்பை முடித்து ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்வதாக பொய் சொல்கிறார்.

நண்பர்களிடம் பணத்தை வாங்கி வீட்டில் கொடுப்பது, அரட்டை அடிப்பது, சிகரெட் பிடிப்பது, குடிப்பது, என தன்னுடைய வாழ்க்கையை கடத்துகிறார். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் அனுபமா பரமேஸ்வரன் பிரதிபிடம் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்ல பிரதீப் மனமடைந்து போகிறார்.

அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்து கொள்ளும் நபரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று போலியாக சான்றிதழ ரெடி செய்து ஐடி நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார் பிரதீப் அங்கு அதிக சம்பளம் வாங்கி, புது வீடு, புது காரு என்று தன்னுடைய வாழ்க்கையை உயர்த்துகிறார்.

இந்நிலையில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆன கே எஸ் ரவிக்குமாரின் மகள் கைடு லோகரை பிரதிப்புக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் படித்த கல்லூரியின் முதல்வரான மிஸ்கினை பிரதிப் ரங்கநாதன் எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிடுகிறது. அப்பொழுது அவர் மோசடி செய்து வேலைக்கு சேர்ந்திருக்கிறார் என்ற விஷயம் மிஸ்கினுக்கு தெரிய வர பிரதீப் ரங்கநாதன் மிஷ்கினிடம் மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் மிஷ்கினோ மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் நீ வைத்துள்ள 48 அரியரையும் மூன்று மாதத்தில் கிளியர் செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசடி செய்த செயலை எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்று சொல்கிறார் மிஷ்கின். பிறகு வேறு வழியே இல்லாமல் மீண்டும் கல்லூரிக்கு செல்கிறார் பிரதீப்.

அதன் பிறகு நடந்தது என்ன? பிரதீப் தன்னுடைய அரியர் எல்லாவற்றையும் கிளியர் செய்தாரா? இல்லையா? என்பதே டிராகன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : அஸ்வந்த் மாரிமுத்து தயாரிப்பாளர்கள் : கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி
அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ் எம் வெங்கட் மாணிக்கம்
இசையமைப்பாளர் : ஜேம்ஸ்
ஒளிப்பதிவு இயக்குனர் : பொம்மி
எடிட்டர் : பிரதீப் ராவ்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன், கேஒ சேஷா, கானா அபேலா
நடனம் : பிருந்தா, சாண்டி, அசார், ஜே.டி கதை : அஸ்வத் மாரிமுத்து, பிரதிப் ரங்கநாதன்
திரைக்கதை வசனம் : அஸ்வத் மாரிமுத்து மக்கள் தொடர்பு : நிகில் முருகன்