சாய் ராஜகோபால் இயக்கத்தில், கவுண்டமணி, யோகி பாபு, ஒ ஏ கே சுந்தர், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து, வையாபுரி, முத்துக்காளை, டி ஆர் சீனிவாசன், அன்பு மயில்சாமி, வாசன் கார்த்திக், கூல் சுரேஷ், சென்ராயன், கஜேஸ் நாகேஷ், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார், தாரணி, ராஜேஸ்வரி, லேகஸ்ரீ, மணிமேகலை, மணவை பொன் மாணிக்கம், டாக்டர் காயத்ரி, சதீஷ் மோகன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஒத்த ஓட்டு முத்தையா.
கவுண்டமணி, சட்டமன்றத் தேர்தலில் நின்று ஒரே ஒரு ஓட்டு பெற்றதால் அவரை எல்லோரும் ஒத்த ஒட்டு முத்தையா என்று அழைக்கிறார்கள். தன்னுடைய தங்கைகள் மூன்று பேருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவுடன் இருக்கிறார் கவுண்டமணி.
ஆனால் அவரின் தங்கைகளோ வேறு நபர்களை காதலிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பவர்களை தான் திருமணம் செய்த முயற்சிக்கிறார்கள். அதனால் அந்த மூன்று பேரையும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என்று கவுண்டமணியிடம் சொல்லி அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று தங்கைகள் மூன்று பேரும் திட்டம் தீட்டுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் தேர்தல் வருகிறது இந்த முறை கவுண்டமணிக்கு சீட்டு தராமல் கவுண்டமணியிடம் டிரைவராக வேலை பார்க்கும் யோகி பாபுவிற்கு சீட்டுக் கொடுக்கப்படுகிறது.
அதனால் கவுண்டமணி கோபப்பட்டு கட்சியை விட்டு விலகி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடைசியில் கவுண்டமணி சுயேட்சையாக நின்று தேர்தலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? அவருடைய தங்கைகள் கவுண்டமணியை ஏமாற்றி காதலர்களை திருமணம் செய்தார்களா? இல்லையா? என்பதை ஒத்த ஒட்டு முத்தையா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
சினி கிராஃப்ட் புரொடக்ஷன் :
தயாரிப்பாளர் : ரவிராஜா M E..
இணைத் தாயாரிப்பு : கோவை லஷ்மி ராஜன்..
கதை.. திரைக்கதை..வசனம்.. இயக்கம் : சாய் ராஜகோபால்..
கேமரா மேன் : S A காத்தவராயன்
எடிட்டர் : ராஜா சேதுபதி & நோயல்
ஆர்ட் டைரக்டர் : மகேஷ் நம்பி
இசை : சித்தார்த் விபின்
பாடல்கள் : சினேகன் – மோகன்ராஜா – சாய்ராஜகோபால்
மக்கள் தொடர்பு நிகழ் முருகன்