2k லவ் ஸ்டோரி விமர்சனம்

விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், மீனாட்சி கோவிந்தராஜ், ஜகாவீர், லத்திகா பாலமுருகன், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி பி முத்து, வினோதினி, ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 2k லவ் ஸ்டோரி.

சின்ன வயசுல இருந்தே ஜகாவீரூம் மீனாட்சி கோவிந்தராஜனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் நண்பர்களாக பிரபலமாக இருக்கின்றனர்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களுடைய நண்பர்களுடன் இணைந்து ப்ரீ வெட்டிங் சூட் என்கிற நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் கல்லூரியில் ஜூனியர் ஆக படிக்கும் லத்திகா பாலமுருகன் ஜகாவீரை காதலிப்பதாக கூறுகிறார். ஜகாவீரும் அதற்கு ஓகே சொன்னாலும் மீனாட்சி சொன்னால் மட்டும்தான் உன்னை காதலிக்க முடியும் என்று சொல்கிறார்.

லத்திகா பாலமுருகன் மீனாட்சியிடம் காதலிப்பதாக சொல்ல மீனாட்சியும் இவர்களின் காதலுக்கு ஓகே சொல்கிறார். அதன் பிறகு ஜகாவீரூம், லத்திகாவும்  காதலிக்கிறார்கள். சில நாட்கள் சென்ற பிறகு மீனாட்சிக்கு ஜகாவீர் மீது ஒரு பொசசிவ்னஸ் வருகிறது.

ஒரு சூழ்நிலையில் லத்திகாவுக்கு கல்லூரியில் ஒரு பிரச்சனை வர அதற்கு ஜகாவீரை லத்திகா அழைக்க ஆனால் ஜகாவிரோ மீனாட்சி செல்வதை கேட்டு வேறு ஒரு விஷயத்தை செய்கிறார். இதனால் லத்திகாவுக்கு கோபம் வர உனக்கு மீனாட்சி தான் முக்கியம் என்றால் நாம் பிரிந்து விடலாம் என்று சொல்ல ஜகாவீரூம் இந்த சூழ்நிலையிலும் மீனாட்சி விட்டு பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது ஜகாவீரூம் லத்திகாவும் சேர்ந்தார்களா? இல்லையா? மீனாட்சி ஜகாவர் இவர்களின் நட்பு இறுதிவரை நட்பாகவே இருந்ததா? இல்லையா? என்பதே 2k லவ் ஸ்டோரி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : விக்னேஷ் சுப்பிரமணியன்

இயக்கம் : சுசீந்திரன்

ஒளிப்பதிவு : ஆனந்த கிருஷ்ணா

இசை : டி இமான்

மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

ரேட்டிங் 4/5