ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகினி, கலேஷ், தீபா, அனுஷா நடிப்பில் வெளியாகியுள்ள படம் காதல் என்பது பொதுவுடமை.
ரோகினி தன் மகள் லிஜாமோலுவை சிங்கிள் மதராக மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார். தன் மகள் எது கேட்டாலும் செய்து வருகிறார்.
அப்பா வினிதோ வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் லிஜோமோல் தன் அம்மாவிடம் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார். அம்மா ரோகினியும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் மகளின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை காதலிக்கும் பையனை மதியம் சாப்பாட்டிற்கு அழைத்து வருமாறு கூறுகிறார் ரோகிணி.
ஞாயிற்றுக்கிழமை அன்று கலேஷும் அனுஷாவும் லிஜோமோல் வீட்டிற்கு வருகின்றனர்.
ரோகினியும் தன் மகனின் காதலன் கலேஷ் தான் என்று நினைத்து சந்தோஷப்பட்டு அவரை கவனித்துக் கொள்கிறார். யார் முதலில் காதலை சொன்னீர்கள் என்ற ரோகினி கேட்க லிஜோமோலுவோ, நானும் அனுஷாவும் தான் காதலிக்கிறோம் என்ற சொல்ல, ஒரு பொண்ணும் பொண்ணும் காதலிக்கிறீர்களா என்று ரோகிணி அதிர்ச்சி அடைந்து அனுஷாவை வீட்டை விட்டு விரட்டுகிறார் ரோகிணி.
இதனால் அம்மாவிற்கு மகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் லிஜோ-அனுஷாவின் காதலை ரோகிணி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? வினித்தும் இதனை எப்படி எடுத்துக் கொண்டார்? எப்படி கையாளுகிறார்? என்பதே காதல் என்பது பொதுவுடமை படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்
வெளியீடு : BOFTA G. தனஞ்ஜெயன்
ஒளிப்பதிவு : ஸ்ரீசரவணன்
இசை : கண்ணன் நாராயணன்
எடிட்டிங் : டேனி சார்லஸ்
கலை : ஆறுசாமி
பாடல் : உமாதேவி
மக்கள் தொடர்பு : குணா
தயாரிப்பு : Jeo baby
Mankind cinemas,
Symmetry cinemas
Niths production