யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரதாப் இயக்கத்தில், ஜெய், யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இளவரசு, சிங்கம் புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா பாபிகோஸ், விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பேபி & பேபி.
பொள்ளாச்சியில் பெரிய ஜமீன்தாரராக இருக்கும் சத்யராஜ் அவருடைய மகன் ஜெய் தன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வக்கீல் நண்பன் ஆலோசனைப்படி வெளிநாடு சென்று விடுகிறார்.
சத்யராஜ் ஜமீனுக்கு அடுத்த வாரிசு ஆண் குழந்தை தான் என்று தன் மகளுக்கு பிறக்கும் குழந்தையை வாரிசாக நியமிக்க முடிவு எடுக்கிறார். ஆனால் அது பெண் குழந்தையாக பிறக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி சத்யராஜுக்கு தெரிய வர ஜெய்யை ஊரூக்கு உடனே கிளம்பி வர சொல்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் யோகி பாபு தன் அப்பா இளவரசு சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரும் வெளிநாடு சென்று விடுகிறார்.
யோகி பாபுவின் அப்பாவான இளவரசுக்கு ஜோசியத்தின் மேல் அதிக நம்பிக்கை உள்ளதால் ஜோசியத்தை பார்த்துதான் அனைத்து காரியங்களையும் செய்வார். அதனால் ஜோசியத்தில் தன் குடும்பத்திற்கு பெண் வாரிசு வந்தால் தன்னுடைய சில பிரச்சினைகள் தீரும் என்று ஜோசியர் சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், யோகி பாபுவிற்கு பெண் குழந்தை பிறந்த செய்தி இளவரசுக்கு வர, வெகு நாட்களாக பிரச்சனையில் இருந்த வீடு அவரின் பேருக்கு மாறிவிட்டதாக தகவலும் வருகிறது. இதனால் மகிழ்ச்சியாகும் இளவரசு யோகி பாபுவை குழந்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு வரும்படி கூறுகிறார்.
இளவரசு அவர் ஊரிலும், சத்யராஜ் அவர் ஊரிலும், குழந்தைகளை வரவேற்பதற்காக பெரிய விழாவினை ஏற்பாடு செய்து வைத்துள்ளார்கள்.
ஆனால், ஜெய் குழந்தையும் யோகி பாபுவின் குழந்தையும் ஏர்போட்டில் மாறிவிடுகிறது.
பிறகு இப்பொழுது அப்பாவை சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருவரும் அவரவர் ஊருக்கு செல்கிறார்கள். ஃபோனில் தொடர்பு கொண்டு குழந்தைகளை எடுத்து வருவதாக கூறுகிறார்கள். இரண்டு நாட்கள் சமாளித்து குழந்தையை ஒப்படைக்க இருவரும் செல்லும் போது, ஜெயிடம் இருக்கும் யோகி பாபுவின் குழந்தை கடத்தப்படுகிறது.
அந்த குழந்தையை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? குழந்தை மீண்டும் கிடைத்ததா? இல்லையா? சத்யராஜுக்கும் இளவரசுக்கும் உண்மை தெரிந்ததா? இல்லையா? இருவரும் அதனை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதே பேபி&பேபி படத்தோட மீதிகதை.
தொழில் நுட்பகலைஞர்கள்
இயக்கியவர் : பிரதாப்
இசை : டி. இமான்
ஒளிப்பதிவாளர் : டி.பி. சாரதி எஸ்.ஐ.சி.ஏ
எடிட்டர் : ஆனந்தலிங்ககுமார்
பாடல் வரிகள் : யுகபாரதி
ஸ்டண்ட் : ஓம் பிரகாஷ்
கலை இயக்குனர் : விஜய் ஐயப்பன்
DI : Lixo Pixels
விளம்பர வடிவமைப்பாளர் : நிவேக் சுந்தர் கிராபிக் அலை
நிர்வாக தயாரிப்பாளர் : ஏ.இளன்குமார், ஜி.ராஜேஷ் நாராயணன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : எஸ்.என்.அஸ்ரப்
தயாரிப்பு நிர்வாகி : எம்.உதயகுமார்
ஆடை வடிவமைப்பாளர் : கமலி செந்தில்குமார்
ஒலி விளைவுகள் : சி.சேது
ஒலி கலவை : ஜெய்சன் & டேனியல்
ஒலி பொறியாளர் : சி ஷாஜூ
விஎஃப்எக்ஸ் : ஜனார்த்தனன் எம் (சிம்பயோசிஸ் டெக்னாலஜிஸ்)
ஸ்டில்ஸ் : எம்.குமரேசன்
ஒப்பனை : மாரியப்பன்
மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ்2 மீடியா
தயாரிப்பு: யுவராஜ் பிலிம்ஸ்
ரேட்டிங் 4/5