சைதன்யா ப்ரடக்ஷன்ஹவுஸ் தயாரிப்பில், சங்கர் ஜி இயக்கத்தில், ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்தே, எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தினசரி.
அம்மா மீரா கிருஷ்ணன் அப்பா எம்எஸ் பாஸ்கர் அக்கா வினோதினி மற்றும் அக்கா குழந்தையுடன் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஸ்ரீகாந்த்.
அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் நினைக்கிறார்கள் ஆனால் ஸ்ரீகாந்த் திருமணத்திற்கு ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார் அந்த கண்டிஷன் என்னவென்றால்.தனக்கு வரப்போற மனைவி தன்னைவிட நிறைய சம்பாதிக்க வேண்டும் அதன் மூலம் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான்.
இந்த கண்டிஷனுக்கு ஒத்து வராமல் எட்டு பெண்களைப் பார்த்து ரிஜெக்ட் ஆன பிறகு 9 ஆவதாக சிந்தியாவை அவரது பெற்றோர் ஸ்ரீகாந்திற்கு ஏற்ற மாதிரி பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஆனால் சிந்தியாவிற்கு திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை செய்து வீட்டில் இருந்து வீட்டில் உள்ளவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆசை, இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இதனால் இருவரும் சேர்ந்து வாழாமல் இருக்கிறார்கள் ஒரு கட்டத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நிதி நிறுவனத்தில் தன்னுடைய மொத்த சேமிப்பையும் முதலீடு செய்கிறார் ஸ்ரீகாந்த். அந்த நிறுவனம் ஏமாற்றி விடுகிறது.
இதனால் கடன் வாங்கி கடன் பிரச்சனையிலும் மாட்டிக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். கடன் பிரச்சனையை வீட்டிற்கு தெரியாமல் சமாளித்து வருகிறார். இருந்த போதிலும் சில பல பிரச்சனைகள் வீட்டில் உருவாவதால், மனக்கசப்புகள் ஏற்பட்டு ஸ்ரீகாந்திடம் யாரும் பேசாமல் இருக்கிறார்கள். மனைவி சிந்தியாவும் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீகாந்தும் சிந்தியாவும் சேர்ந்து வாழ்ந்த வாழ ஆரம்பித்தார்களா? இல்லையா? ஸ்ரீகாந்தின் கடன் பிரச்சினை தீர்ந்ததா? இல்லையா? ஸ்ரீகாந்தின் எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை தினசரி படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : சைதன்யா ப்ரடக்ஷன்ஹவுஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சங்கர்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ்
கலை : ஜான் பிரிட்டோ
சண்டை : சாம்
நடனம் : தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை : பாலமுருகன்– சண்முகம்
மக்கள் தொடர்பு : குமரேசன்
ரேட்டிங் 3/5