XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், குஷ்பூ, சரத்குமார், பிரபு, கல்கி கோய்ச்லின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நேசிப்பாயா.
நாயகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கரை கண்டதும் காதல் வயப்படுகிறார். அதிதி சங்கரரை பின்னால் தொடர்ந்து அவரை காதல் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார். முதலில் மறுக்கும் அதிதி பிறகு ஆகாஷ் முரளியை காதலிக்க தொடங்குகிறார்.
இருவரின் காதலும் சூப்பராக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், இவர்களுக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பிரிந்ததும் அதிதி சங்கர் போர்ச்சுகளில் வேலை பார்க்க சென்று விடுகிறார்.
சில காலங்கள் செல்ல, போர்ச்சுகலில் ஒரு தொழிலதிபரை கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுகிறார் அதிதி சங்கர். கொலை குற்றத்திற்காக அதிதி சங்கரை போலீஸ் கைது செய்வதை தொலைக்காட்சியில் பார்க்கிறார் ஆகாஷ். என்ன நடந்தது என்று கண்டுபிடித்து அதிதியை காப்பாற்றுவதற்காக போர்ச்சுகல் செல்கிறார் ஆகாஷ்.
அங்கு சென்று அதிதி சங்கரை காப்பாற்றினார்? இல்லையா? என்பதே நேசிப்பாயா படத்தோட மீதி கதை.
ஆகாஷ் முரளி, தனது அறிமுக படமான ‘நேசிப்பாயா’வில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். காதல், ஆக்ஷன், மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
அதிதி சங்கர் தியா என்ற கதாபாத்திரத்தில், சக்திவாய்ந்த நடிப்பால் திறமையை காட்டி உள்ளார். காதல் மற்றும் சோக காட்சிகளில் அவரின் வெளிப்பாடுகள் பாராட்டுக்குரியவை.
படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார், தனது அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தி கதைக்கு வலுவை சேர்த்துள்ளார்.
மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு படம் நேசிப்பாயா.