ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், சோனு சூட், ஆர்யா, மனோபாலா, மணிவண்ணன்,
சுவாமிநாதன், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, காயத்திரி ஆகியோர் நடிப்பில் பொங்கல் சரவெடியாக வெளிவந்துள்ள படம் மதகஜராஜா.
ஆர் சுந்தர்ராஜனின் மகனாக இருக்கும் விஷால், தனது நண்பர்கள் மீது அளவு கடந்த நட்பை வைத்திருக்கிறார். சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நாயகன் விஷால்.
விஷாலி நண்பர்களாக சடகோபன் ரமேஷ், நித்தின் சத்தியா மற்றும் சந்தானம் மூவரும் இருக்கிறார்கள்.
அஞ்சலியின் தந்தையாக வரும் சாமிநாதனை ஒரு சந்தர்ப்பத்தில் எதிரிகளிமிருந்து காப்பாற்றுகிறார் விஷால். மீண்டும் இவர்களால் ஆபத்து வரும் என்பதால் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறார் விஷால்.
அஞ்சலியும் விஷாலும் காதலிக்கிறார்கள் இந்த விஷயம் சுந்தர்ராஜனுக்கு தெரிய வர, இதனை ஏற்றுக் கொள்ளாத கோபமடையும் சுந்தர்ராஜன் அஞ்சலியின் குடும்பத்தை ஊறி விட்டு அனுப்பி விடுகிறார்.
இப்படி இருக்கையில் தங்கள் பள்ளி ஆசிரியரின் மகள் திருமணத்தில் தங்களுடைய பள்ளி நண்பர்களான சந்தானம், சடகோபன் ரமேஷ், நித்தின் சத்யா அனைவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். நண்பர்களுக்கும் பிரச்சனையை தெரிந்து கொள்கிறார் விஷால் அந்த பிரச்சினைகளை விஷால் எப்படி தீர்த்து வைத்தார் என்பதை காமெடி கலந்த சரவெடியாக சொல்லி இருப்பதே மதகஜராஜா.
விஷால், நாயகனாக ஒரு விறுவிறுப்பான கதாபாத்திரத்தைத் சிறப்பாக அருமையாக செய்திருக்கிறார்.
அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார், அவர்களின் நடிப்பு கதையின் காதல் அம்சத்தை உயிர்ப்பிக்கிறது.
சந்தானம், படத்தின் நகைச்சுவையின் முழுப் பொறுப்பையும் திறம்பட ஏற்றுள்ளார். அவரது வசனங்கள் கதைக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.
மணிவண்ணன் மற்றும் மனோபாலா மொத்த படத்துக்கு கலகலப்பை கூட்டுகின்றனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்க்யூட்
கதை, திரைக்கதை, இயக்கம் : சுந்தர்.சி
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்
இசை : விஜய் ஆண்டனி
வசனம் : வெங்கட்ராகவன்
எடிட்டர் – ஸ்ரீகாந்த் என் பி
கலை இயக்குனர் – குருராஜ்
ஸ்டண்ட் : சூப்பர் சுப்பராயன்
நடனம் : பிருந்தா, ஷோபி
பாடல் வரிகள் : பா. விஜய், அண்ணாமலை
தயாரிப்பு நிர்வாகி : ஆர்.பி.பாலகோபி
மக்கள் தொடர்பு : ஜான்சன்
“மதகஜ ராஜா” குடும்பத்துடன் பார்க்க ஏற்றவகையில், களைப்பை மறக்கும் பொழுதுபோக்கு சூப்பர் ஹிட் படம்
ரேட்டிங் 4.5/5