தில் ராஜு தயாரிப்பில், எஸ். சங்கர் இயக்கத்தில், ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுஷாந்த், சமுத்திரக்கனி, சுனில், சுபலேகா சுதாகர், ஜெயராம், பிரவீணா, நவீன் சந்திரா, வத்சன் சக்ரவர்த்தி, ராஜீவ் கனகலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கேம் சேஞ்சர்.
தன்னுடைய காதலி கியாரா அத்வானிக்கு கொடுத்த வாக்குறுதிக்காக ஐபிஎஸ் ஆக இருந்த ராம்சரண் அதனை விட்டுவிட்டு மீண்டும் படித்து ஐஏஎஸ் ஆக ஆகிறார். தன்னுடைய மாவட்டத்திற்கு கலெக்டராகவும் வருகிறார் ராம்சரண்.
மாவட்டத்தில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள், மணல் கடத்தல், என எல்லாவற்றிற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா வின் பினாமி செய்து வரும் மணல் கடத்தல் மீதும் நடவடிக்கை எடுக்கிறார் ராம்சரண்.
அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவரின் மகனும் மந்திரியாகவும் இருப்பவர் எஸ் ஜே சூர்யா. தன் அப்பாவிற்கு பிறகு மாநிலத்தின் முதல்வர் தான்தான் என்ற கனவில் இருந்து வருகிறார். எஸ் ஜே சூர்யாவுக்கும் ராம்சரனுக்கும் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துக் கொண்டே இருக்கிறது.
தன்னுடைய கலெக்டர் பதவிக்கான அதிகாரத்தை எஸ் ஜே சூர்யா மீது ராம்சரண் காட்டுகிறார் இதனால் மிகுந்த எரிச்சலும் கோபமும் அடைகிறார் எஸ் ஜே சூர்யா.
உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் அப்பாவான முதலமைச்சரை கொன்றுவிடுகிறார் எஸ் ஜே சூர்யா. தாம் தான் அடுத்த முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், முதலமைச்சரோ இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார், அந்த வீடியோ வெளி வருகிறது.
அந்த வீடியோவில் தன்னுடைய அரசியல் வாரிசான ராம்சரண் தான் அடுத்த முதல்வர் என்று கூறி இருக்கிறார்.
அதன்படி கட்சியின் பொறுப்பாளர்கள் சேர்ந்து அடுத்த முதல்வராக ராம் சரணை அறிவிக்கிறார்கள். இதனை எஸ் ஜே சூர்யா ஏற்க மறுக்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன என்பதே கேம் சேஞ்சர் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : தில் ராஜு
இசை : எஸ். தமன்
பேனர் : எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ்
இயக்குனர் : எஸ். சங்கர்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)