வணங்கான் விமர்சனம்

வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷ்ணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, யோகன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வணங்கான்.

நாயகன் அருண் விஜய் காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவருடைய தங்கையாக பரிதா இருக்கிறார். இருவரும் உண்மையான அண்ணன் தங்கை இல்லை சுனாமியால் பெற்றோரை எழுந்து சேர்ந்தவர்கள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அதிக பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அருண் விஜய் ஒருதலையாக காதலித்து நாயகி ரோஷ்ணி பிரகாஷ்.

தனக்கு ஏதாவது தப்பு என்று பட்டால் அதை உடனே தட்டிக் கேட்கும் பழக்கம் உடையவராக இருக்கிறார் அருண் விஜய்.
அருண் விஜய்க்கு ஒரு வேலை கிடைத்தால் அவன் இப்படி இருக்க மாட்டான் என்று தங்கை எரிதாவும் ரோஷ்ணி பிரகாஷ்ம் சேர்ந்து மாற்றுத்திறனாளிகளின் காப்பகம் ஒன்றில் செக்யூரிட்டி பணிக்கு சேர்த்து விடுகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் பார்வையற்ற பெண்கள் குளிப்பதை மூன்று பேர் மறைந்திருந்து பார்க்கின்றனர். இதை உணர்ந்து அந்தப் பெண்கள் அதனை அருண் விஜய்யிடம் சொல்ல மூன்று பேரில் இருவரை மிக கொடூரமான முறையில் கொலை செய்து விடுகிறார் அருண் விஜய்.

பிறகு தானாவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைகிறார் அருண் விஜய். அதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி உண்மையை கண்டறிந்தாரா? இல்லையா? அருண் விஜயின் வாழ்க்கை என்னவானது என்பதை வணங்கான் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி
இயக்கம் : பாலா
இசை : ஜிவி பிரகாஷ்
பின்னணி இசை : சாம் சி எஸ்
ஒளிப்பதிவு : குருதேவ்
மக்கள் தொடர்பு : ஜான்.A

ரேட்டிங் : 4/5