மெட்ராஸ்காரன் விமர்சனம்

எஸ் ஆர் ப்ரோடக்ஷன்ஸ் சார்பில், ஜெகதீஷ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், ஷேன் நிகாம், கலையரசன், நிகாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்புராயன், சரண், கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ”மெட்ராஸ்காரன்”.

சென்னையில் வேலை பார்க்கும் நாயகன் ஷேன் நிகாம் தன் திருமணத்தை தன் சொந்தங்களுடன், தன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் மிக சிறப்பாக நடத்த திட்டமிடுகிறார்.

அவ்வாறு சிறப்பாக நடத்த பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், மறுநாள் திருமணம் என்ற நிலையில் இருக்க விடுதியில் தங்கி இருக்கும் தன் காதலி நிகாரிகா வர சொன்னதற்காக அவளை பார்ப்பதற்காக காரில் செல்கிறார்.

அப்படி போகும்போது கைபேசியில் பேசிக்கொண்டே செல்கிறார் எதிர்பாராத விதமாக வழியில் நிறைமாதாக கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தா மீது கார் மோதி விட அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஷேன் நிகாம்.

ஊரில் எந்த அநியாயங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக நிற்கும் மிகவும் கோபம் காரரான கலையரசன் தான் ஐஸ்வர்யா தத்தாவின் கணவர்.

ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு இப்பொழுது தான் பிற குழந்தை பிறக்க இருந்தது. ஆனால் அது இப்போது இல்லாமல் போவதற்கு காரணமான ஷேன் நிகாரை கலையரசனும் அவரது மச்சான் சரணும்
அடித்து நொறுக்குகிறார்கள்.

போலீஸ் ஷேன் நிகாரை கைது செய்து அழைத்துச் செல்ல அவருடைய திருமணமும் நின்று விடுகிறது.

இதன் பிறகு என்ன நடந்தது என்பதே மெட்ராஸ்காரன் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் : எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் – P ஜெகதீஷ்
எழுத்தாளர் மற்றும் இயக்குனர் : வாலி மோகன் தாஸ்
இசை : சாம் சிஎஸ்
ஒளிப்பதிவாளர் : பிரசன்னா S குமார்
எடிட்டர் : வசந்தகுமார்
கலை : ஆனந்த் மணி
ஸ்டண்ட் : தினேஷ் சுப்பராயன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)