2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமான பாகீரா 25 டிசம்பரிலிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படும்

KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹொம்பாலே பிலிம்சின் சிறப்புத்தன்மையின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமாக மாறியது. இந்த சமூக காவலன் திரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காக தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது.

டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூக காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையை கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்திவாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில் எதிர்கொள்கிறார்.

அதிரடி காட்டும் ஆக்ஷன் சீக்வென்சுகள், ஆழ்ந்த உணர்ச்சி பாவம் மற்றும் ருக்மிணி வசந்த், ரங்காயனா ரகு மற்றும் அச்யுத் குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களை கொண்ட பாகீரா படம், வெயிட்டான சினிமா அனுபவங்களை புனையும் ஹொம்பாலே பிலிம்சின் உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஹொம்பாலே பிலிம்சின் தயாரிப்பாளரான விஜய் கிரகன்டுர் கூறுகையில், “KGF தொடங்கி பாகீரா வரை ஹொம்பாலே பிலிம்சானது உலகளாவிய வகையில் ஆர்வத்தை தூண்டும் தன்மை மற்றும் ஈடற்ற தீவிரம் ஆகியவற்றை கொண்ட கதைகளை வழங்குவதை எப்பொழுதும் நோக்கமாக கொண்டுள்ளது. பாகீரா ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட திரைப்படம் மட்டுமல்ல இப்போது ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் பரந்துப்பட்ட ரசிகர்களை சென்றடையவிருக்கிறது என்பதில் மிகுந்த குதூகலம் அடைகிறோம். இந்த கிறிஸ்துமசின் போது ஹொம்பாலே பிலிம்சின் மாயாஜாலத்தை ரசிகர்கள் உணரும் சரியான தருணம் இதுவேயாகும்,” என்று விளக்கினார்.

வேதாந்த் பாத்திரத்தை அலங்கரிக்கும் ஸ்ரீமுரளி கூறுகையில், “வேதாந்த் கேரக்டரை செய்வது மற்றும் ஒரு முக்கிய அதிகாரி என்பதிலிருந்து ஒரு அயராத சமூக காவலன் என்ற நிலைக்கு அவர் தன் பயணத்தை மேற்கொள்வது என்பது சவால் நிறைந்ததாகவும் ஆத்ம திருப்தியை வழங்குவதாகவும் இருந்தது. திரையரங்கு வெளியீட்டை தொடர்ந்து கிடைத்த மாபெரும் வெற்றிக்கு பின் பாகீரா இப்போது மேலதிக விசிறிகளுக்கு விருந்து படைக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தியில் வெளியாவதை குறித்து மிகவும் குதூகலம் அடைகிறேன்,” என்று விளக்கினார்.

பாகீரா டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தியில் 25 டிசம்பரிலிருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.