4 புதிய விற்பனை நிலையங்களை தொடங்கிய மிஆ பை தனிஷ்க்

மிஆ பை தனிஷ்க், சென்னை வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் ஸ்டைலுடன் ரன்வே ஸ்டார் நிகழ்ச்சியையும், 4 புதிய விற்பனை நிலையங்களின் தொடக்கத்தையும் கொண்டாடுகிறது.

இந்தியாவின் முன்னணி உயர்தர ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றான மிஆ பை தனிஷ்க், சமீபத்தில் சென்னையில் மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனது தனித்துவமான ரன்வே ஸ்டார் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. பிரத்தியேக மாலை நேரமானது விசுவாசமிக்க மிஆ வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்ததோடு, இம்மாநகரத்தின் உற்சாகமிக்க வாடிக்கையாளர்கள் மீது மிஆ கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு வாடிக்கையாளர்களின் தனித்துவமிக்க ஆளுமை, நம்பிக்கை மற்றும் பாணியைக் கொண்டாட வழி வகுக்கும் வகையில் வாடிக்கையாளர்களை மேடையில் ஏற்றி, மிஆ ஆபரணங்களால் அலங்கரிக்க செய்து, வசீகரமாக ரன்வேயில் நடக்க செய்து அழகுப் பார்த்தது. இது ​​நவீன யுகத்தைச் சேர்ந்த மிஆ பெண்ணின் ஆத்மார்த்தமான ஆளுமையை வெளிப்படுத்திய நிகழ்வாக சிறப்புற செய்தது குறிப்பிடத்தக்கது.

ரன்வே ஸ்டார் நிகழ்வு மற்றும் நான்கு புதிய விற்பனை நிலையங்கள் அறிமுகம் குறித்து பேசிய தனிஷ்க் பை மிஆ-வின் சில்லறை வர்த்தகப் பிரிவு தலைவர் திரு. சஞ்சய் பட்டாச்சார்ஜி.. கூறுகையில், “மிஆ பை தனிஷ்க்கிற்கு மிக முக்கியமான நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சென்னையில், மிஆ ரன்வே ஸ்டார் நிகழ்வை இங்கு நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியிலும், எங்களது வாடிக்கையாளர்களை மையமாக கொண்டே மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த உற்சாகமான நிகழ்வு மற்றும் எங்களது புதிய விற்பனை நிலையங்களின் அறிமுகம், நவீன தமிழ் பெண்களுக்கு நவநாகரீக நகைகளை இன்னும் எளிதாக கிடைக்க செய்ய வேண்டுமென்பதிலும், மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்கள் மிஆவின் வடிவமைப்புகளை ரன்வே ஸ்டார் நிகழ்வில் நம்பிக்கையுடன் காட்சிப்படுத்துவதைப் பார்த்த பொழுது, அவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் வலுவான உறவுக்கு சான்றாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. இப்போது,​​சென்னை நகரத்தில் 14 பிரத்தியேக விற்பனை நிலையங்களுடன், இம்மாநகரின் உற்சாகமிகுந்த, விவேகமான வாடிக்கையாளர்களுடன் எங்கள் உறவை மேலும் ஆழப்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். சென்னையில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள் சமகால பாணியில் ஆர்வமுள்ளவர்கள். மேலும், நவீன நேர்த்தியுடன் கலாச்சார பாரம்பரியத்தை அழகுடன் ஒன்றிணைக்கும் நகைகளைப் பாராட்டுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆபரணங்களை வடிவமைத்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.’’ என்றார்..