சூது கவ்வும் 2 விமர்சனம்

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் தயாரிப்பில், எஸ்.ஜெ.அர்ஜுன் இயக்கத்தில், சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திர சேகர்,பாஸ்கர், கவி, கல்கி, அருள் தாஸ், யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, ராதா ரவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சூது கவ்வும் 2.

தமிழக நிதி அமைச்சராக இருக்கும் கருணாகரன், ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலில் இருக்கிறார்.

கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதிலும் முதலில் இருக்கிறார். அதனால் கருணாகரன் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் ராதாரவி.

ஓட்டுக்கு மக்களுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரிடம் கொடுக்கிறார் முதல்வர் ராதாரவி. அதற்காக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு பணத்தைக் கொடுக்க கருணாகரன் திட்டம் தீட்டி 60 ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார்.

அந்த பணத்தை தேவைப்படும் பொழுது உடனடியாக விநியோகம் செய்வதற்காக ஒரு மெஷினை வங்கியிடம் இருந்து வாங்கி வைத்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் சூது கவ்வும் முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போலவே கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா கற்பனை பெண்ணுடன் காதல் செய்து கொண்டிருக்கிறார்.

அமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழ்நிலை வெற்றி சிவாவிற்கு ஏற்படுகிறது.

அதே சமயத்தில் வங்கியில் இருக்கும் பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய நேரமும் வருகிறது.

மிர்ச்சி சிவா கருணாகரனை கடத்தி விடுவதால் உரிய நேரத்தில் பணத்தை விநியோகம் செய்ய முடியவில்லை. அதனால் அரசியலில் மட்டும் இல்லாமல் கருணாகரன் வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.

மிர்ச்சி சிவா கருணாகரனை எதற்கு கடத்தினார்? கருணாகரன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை காமெடியுடன் சொல்லி இருப்பதே சூது கவ்வும் 2 படத்தின் கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவாளர் : கார்த்தி​க் கே தில்லை எடிட்டர் : இக்னேஷியஸ் அஸ்வின்
பாடல் வரிகள் : லா வரதன், ஆண்ட்ரூஸ், பார்த்திபன்
இசை (பாடல்கள்) : எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
இசை (பின்னணி) : ஹரி எஸ்.ஆர்
ஆடை வடிவமைப்பாளர் : ஸ்வேதா தங்கராஜ்
நிர்வாக தயாரிப்பாளர்கள் : ஆர்.ராகேஷ், ஹரிஹரன், சந்தோஷ்
ஒலி வடிவமைப்பு : சுகுமார் நல்லகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர்
ஒலி கலவை : ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெபர்சன்
விளம்பர எடிட்டர் : ரமேஷ் யுவி
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.