கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில், ஆர். ரகுநந்தன் தயாரிப்பில், விவி கதிரேசன் இயக்கத்தில், ஆர்யன் ஷ்யாம், ஆத்யா பிரசாத், லீமா பாபு, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அந்த நாள்.
இயக்குநராக இருக்கும் நாயகன் ஆர்யன் ஷாம், தன்னுடைய புதிய படத்தின் வேலைக்காக இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா என்ற இடத்திற்கு போகிறார்.
அங்கு இரவில் அந்த பஞ்சமி பங்களாவில், மர்மான சில சம்பவங்கள் நடக்க, பயத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், அவர்கள் யாராலும் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாமல் போவதோடு மட்டுமில்லாமல், முகமூடி அணிந்து மனிதர் அவர்களை ஆயுதத்துடன் கொலை செய்ய முயற்சி செய்கிறார். அவர் யார்? எதற்காக அவர்களை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? அந்தப் பஞ்சமி பங்களாவில் நடக்கும் மர்மங்கள் என்ன? என்பதே அந்தநாள் படத்தோட மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
நிர்வாக தயாரிப்பாளர் : ஆர்.ஸ்ரீகாந்த்
இசை : என்.எஸ்.ராபர்ட் சற்குணம்
ஒளிப்பதிவாளர் : சதீஷ் கதிர்வேல்
எடிட்டர் : ஜே.எஃப் காஸ்ட்ரோ
தலைமை தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : பி. ஜெய் கணேஷ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : ஹரிபிரசாத் ராஜகோபால்
மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல்