ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் விமர்சனம்

ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில், கேப்டன் டிவி ஆனந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், ஷான், அபிராமி, தலைவாசல் விஜய், பி ஜி எஸ், ராஜாஜி, அஞ்சலி நாயர், பவித்ரா லக்‌ஷமி, சையத், கல்கி, சினி, ஜெகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “Once Upon a Time in Madras”.

சில வருடங்களுக்கு முன் இராணுவ வீரர்கள் வசிக்கும் இடத்திற்குள் சென்று சிறுவன் ஒருவன் பழம் பறித்ததாக கூறி, அந்த சிறுவன் சுடப்பட்டு இறந்த உண்மை சம்பவத்தை சொல்லி படம் ஆரம்பமாகிறது. நான்கு கதைகளாக விரிகிறது படம்.

ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் பரத், உயிருக்கு போராடும் மனைவியை காப்பாற்ற பணத்திற்காக எதையும் செய்ய தயாராகிறார். ஒரு கொலை செய்யும் வேலை பரத்திற்கு வர, துப்பாக்கியுடன் சென்று கொலை செய்து விடுகிறார். பணமும் கிடைத்து விடுகிறது. அந்த பணத்தை வைத்து மனைவியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது ஒரு கதை.

அஞ்சலி நாயர் படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து சுயமாக இருக்க வேண்டும் ஆசைபட்டாலும், வீட்டில் திடீர் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமணம் ஆன பிறகு ஆசைப்பட்டபடி வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தவருக்கு அதுவும் முடியாமல் போகிறது. கர்ப்பமடைந்து விடுகிறார். ஆனால், அந்த கர்ப்பத்திற்கு காரணம்
தன் கணவன் அல்ல, என்ற உண்மையை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். அவரிடமும் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அதனை வைத்து என்ன செய்தார்? தன் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொண்டாரா? இல்லையா? அதன் பிறகு என்ன என்பதே இரண்டாவது கதை.

தலைவாசல் விஜய் சாதி வெறிப்பிடித்த அப்பா, அவருக்கு மகளான பவித்ரா லட்சுமி வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். இதனை தெரிந்து கொண்டவர், பவித்ரா லட்சுமிக்கு அறிவுரை கூறிவிட்டு சாதி பஞ்சாயத்துக்கு செல்கிறார். அப்போது அவர் காரில் துப்பாக்கி ஒன்று இருக்கிறது. அதை போலிசிடம் கொடுக்க நினைக்கும் போது, வேலைக்கு சென்ற மகள், காதலனை பதிவுத் திருமணம் செய்ய இருப்பதாக மகன் சொல்ல கொலைவெறியோடு திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு
போகும் தலைவாசல் விஜய், துப்பாக்கியை வைத்து என்ன செய்தார்? என்பது மூன்றாவது கதை.

துப்புரவு தொழிலாளியான அபிராமி, கணவர் இல்லாமல் தனி ஆளாக தன் மகனை வளர்க்கிறார். மகனின் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசையை நிறைவேற்ற தன் தகுதிக்கு மீறி கடன் வாங்குகிறார்.

அவரது மகன், மனதளவில் பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதை புரிந்த கொண்ட அபிராமி, மகனாக இருந்தவரை மகளாக பாசத்தோடு பார்த்து கொள்கிறார். கடன் கொடுத்தவர் வட்டி கேட்டு மிரட்டுவதோடு, அவரது மகனாக பிறந்து மகளாக மாறியவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டபடும் அபிராமியிடம் ஒரு துப்பாக்கி கிடைக்கிறது, அதன் மூலம் என்ன செய்தார்? தன் பிரச்சனையை தீர்த்துக் கொண்டாரா? இல்லையா? என்பது நான்காவது கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இணை தயாரிப்பு : ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜி.சரவணன்
ஒளிப்பதிவு : கே.எஸ். காளிதாஸ், கண்ணாஆர்
இசை : ஜோஸ் பிராங்க்ளின் படத்தொகுப்பு : ஷான் லோகேஷ்
கலை இயக்குநர் : வி.கே. நடராஜன்
வசனம், பாடல்கள் : எம். ஜெகன் கவிராஜ் சண்டை பயிற்சி : சுகன்
நடனம் : ஷாம்
மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே. செல்வகுமார், மணிமதன்