மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ், அஜய், பிரம்மாஜி, ஜகதீஷ் பிரதாப் பண்டாரி, ஆடுகளம் நரேன், சுனில், அனசுயா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் புஷ்பா 2 : தி ரூல்.
செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளியாக இருந்த வந்த புஷ்பா, செம்மரக் கடத்தல்காரர்கள் சிண்டிகேட்டின் தலைவராக மாறுவதாக முடிந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் புஷ்பா 2-ஆம் பாகத்தில்,
சிண்டிகேட்டின் தலைவன் என்பதையும் தாண்டி, தனக்கான ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி புஷ்பா ராஜாவாக வலம் வருகிறார். ஆனால், அவரை எபப்டியாவது வீழ்த்த வேண்டும் என்று போலீஸ் எஸ்.பி.பகத் பாசில் திட்டம் போட, அதற்கு புஷ்பா தனது பண பலத்தால் பதிலடி கொடுக்கிறார். மனைவி ராஷ்மிகா ஆசையை நிறைவேற்ற ஒரு மாநிலத்தில் முதல்வரையே மாற்றும் அளவுக்கு முயற்சி செய்றார் புஷ்பா. அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? ‘புஷ்பா 2 படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத், ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவு : மிரோஸ்லாவ் ப்ரோஸெக்கின்
எடிட்டிங் : ரூபன் சர்வ், கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
ஆக்ஷன் : க்ரிட் ட்ரீவோரஸ்ரிகுல்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (D’one)