திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில்,
RJ பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நாட்டி, சனியா ஐயப்பன், ஷரஃப் உ தீன், பாலாஜி சக்திவேல், ஹக்கிம் ஷா, சந்தானபாரதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சொர்க்கவாசல்.
ஆர்ஜே பாலாஜி, தன் அம்மாவுடன் இணைந்து தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால், தான் செய்யாத கொலைக்காக குற்றவாளியாக்கப்படும் ஆர்ஜே பாலாஜி, சென்னை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக கொண்டு செல்லப்படுகிறார்.
சிறையில் செல்வராகவன் ரவுடி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். அவருக்கும் புதிதாக வரும் சிறை அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபித்து வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஆர்ஜே பாலஜியை வைத்து, செல்வராக அவனை தீர்த்துகட்ட திட்டம் போடுகிறார்.
ஆனால் அவர் நினைத்தது வேறு நடந்தது வேறு இதனால் சிறையில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. என்ன மாதிரியான பிரச்சனை ஏற்பட்டது? ஆர் ஜே பாலாஜி தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே சொர்க்கவாசல் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ்
எழுத்து & இயக்கம் : சித்தார்த் விஸ்வநாத்
எழுத்தாளர்கள் : தமிழ் பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத்
ஒளிப்பதிவு : பிரின்ஸ் ஆண்டர்சன்
படதொகுப்பு : செல்வா ஆர்.கே
இசையமைப்பாளர் : கிறிஸ்டோ சேவியர்
கலை இயக்குனர் : எஸ் ஜெயச்சந்திரன்
ஸ்டண்ட் டைரக்டர் : தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ருதி மஞ்சரி
பாடகர்கள் : சீன் ரோல்டன் (காலம் தன்னாலே) & அனிருத் ரவிச்சந்தர் (தி எண்ட்)
பாடல் வரிகள் : நிக்ஸி (காலம் தன்னாலே) & கிளின்ட் லூயிஸ் (தி எண்ட் – ஆங்கிலம்) & அருண் ஸ்ரீனிவாசன் (தி எண்ட் – தமிழ்)
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்