பராரி விமர்சனம்

கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஹரிசங்கர் தயாரிப்பில், எழில் பெரியவேதி இயக்கத்தில், ஹரிசங்கர், சங்கீதா கல்யாண், குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன், பிரேம் நாத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பராரி.

சாதி வேறுபாடு பார்க்கும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஹரிசங்கரும் அவரது நண்பர்களும் உயர் ஜாதி இருக்கும் தெருகளில் தங்களுடைய வளர்ப்பு பன்றி ஓடிவிட அதனை பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.

இது அந்த உயர் சாதி மக்களுக்கு பதற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

உயர் ஜாதிக்காரர்கள் ஹரிசங்கருக்கும் அவரது நண்பர்களுக்கும் தொடர்ந்து பலவித பிரச்சனைகளையும் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் இதனால் அந்த ஊருக்குள் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் இவர்களின் கோபத்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை நிறுத்துகிறார்கள்.

அந்த ஊரில் இரு பிரிவினருக்கும் சொந்தமான பாறை ஒன்று உள்ளது அதனை வைத்தும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க அந்த ஆதிக்க சாந்தியைச் சேர்ந்த சங்கீதா கல்யாண் ஹரி சங்கரை காதலிக்கிறார்.

இதனால் ஹரிசங்கரை கொலை செய்ய ஆதிக்க சாதியினர் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக இரண்டு சாதியினரும் வேலைக்காக அங்கு செல்கிறார்கள். ஆனால் இங்கு இவர்களுக்கிடையில் ஜாதி பிரச்சினை இருப்பது போல் அங்கு மொழி பிரச்சனை ஏற்பட்டு இவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.

பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது? எப்படிப்பட்ட அவமானங்களை சந்தித்தார்கள்? இவர்கள் மீண்டும் நல்லபடியாக தமிழகம் வந்து சேர்ந்தார்களா? ஆதிக்க சாதியினர் மாறினார்களா? இல்லையா என்பதே பராரி படத்தோட மிதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

பாடல்கள் : உமாதேவி
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : ஸ்ரீதர்
படத்தொகுப்பு : ஷாம்
கலை இயக்குனர் : ஏ ஆர் சுகுமாரன்
ஒளி வடிவமைப்பு : எஸ். அழகிய கூத்தன் & சுரேன்.ஜி
சண்டை : பயர் கார்த்தி
நடனம் : அபிநயா கார்த்திக்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (D’one)