அப்பு பது பப்பு, ஸ்ரீ கோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில், எம் ரியாஸ் ஆடம் ரூ சிஜோ வடக்கன் தயாரிப்பில், ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில், ஜோஜு ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, ஜுனாயஸ் வி.பி., சீமா ஐ வி சசி, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதன், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ், ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பணி.
மெக்கானிக் கடையில், வேலை செய்யும் சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இளைஞர்கள் ஆகிய இருவரும் கடைக்கு லீவ் சொல்லிவிட்டு சென்று இடப்பிரச்சனையில் இருக்கும் ஒருவரை குத்தி கொலை செய்கின்றனர்.
பிறகு சூப்பர் மார்க்கெட்டில், ஜோஜூஜார்ஜின் மனைவி அபிநயாவிடம் பாலியல் வன்முறை சீண்டலில் ஈடுபடுகிறார் சாகர் சூர்யா. அதற்காக கோபம் அடையும் ஜோஜூ ஜார்ஜ், இருவரையும் சரமாரியாக அடித்து விடுகிறார்.
கொஞ்ச காலத்திற்க்கு முன், ஜோஜூ ஜார்ஜும் அவரது நண்பர்களும் மிகப்பெரும் ரெளடியாக இருந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு எல்லோரும் அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் தன்னை அடித்த
ஜோஜூ ஜார்ஜுவை பழிவாங்க நினைத்து, இருவரும் ஜோஜூ ஜார்ஜுவின் வீட்டிற்க்கு சென்று அவரின் மனைவி அபிநயாவை பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுக்கிறார்கள்.
இதனால், கோபமும் ஆத்திரமும் அடைந்து இருவரையும் கொல்ல நினைக்கிறார்கள் ஜோஜூ ஜார்ஜும் அவரது நண்பர்களும்.
ஜோஜூ ஜார்ஜும் அவரது நண்பர்களுக்கும், சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் ஆகிய இவர்களுக்குள் இடையே நடக்கும் பழிவாங்கும் கதை தான் பணி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு நிறுவனம் : அப்பு பது பப்பு, ஸ்ரீ கோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ்
எழுத்து & இயக்கம் : ஜோஜு ஜார்ஜ்
தயாரிப்பாளர்கள் : எம் ரியாஸ் ஆடம் ரூ சிஜோ வடக்கன்
ஒளிப்பதிவு : வேணு, ஜின்டோ ஜார்ஜ்
இசை : விஷ்ணு விஜய், சாம் சி எஸ்
ஒலி வடிவமைப்பு : அஜயன் அடாட்
தயாரிப்பு வடிவமைப்பு :சந்தோஷ் ராமன்
படத்தொகுப்பு : மனு ஆண்டனி
மக்கள் தொடர்பு : யுவராஜ்