டயானா மரியம் குரியன் நயன்தாராவாக மாறி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த இடத்தை அடைந்தது எப்படி என்பதுதான் இந்த ஆவணப்படம். இதில் நயன்தாரா தான் கடந்து வந்த கடினமான பாதையை பற்றி பேசி இருக்கிறார். தன்னுடைய பழைய காதல்கள் ஆரம்ப காலத்தில் குண்டாக இருந்ததால் எதிர்கொண்ட அவமானங்கள் அதன் பின் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்தது என அனைத்தையும் அவர் பேசியிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலிக்க தொடங்கிய நயன்தாரா கடந்த 2022 ல் அவரை திருமணம் செய்து கொண்டார். கோலகாலமாக நடைபெற்ற அந்த திருமணத்தில் மிகச்சில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டது. போட்டோக்கள் கூட வெளியில் கசிந்து விடாதபடி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் திருமணம் நடந்தது. அதை அடுத்து அந்த வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டது. இரண்டு வருட தாமதத்திற்கு பிறகு தற்போது அது Nayanthara Beyond The Fairytale என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகி உள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிலிக்ஸ் தளத்தில் அந்த ஆவணப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான ஆவனப்பட ட்ரெய்லரில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று வினாடி காட்சிகள் இருந்தது. அதை எதிர்த்து தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதோடு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார். அதை நயன்தாரா மூன்று பக்க அறிக்கையில் வெளியிட்டதோடு தனுஷை சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் இந்த ஆவணப்படத்தில் 20 வினாடிகளுக்கும் மேலாக நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து நயன்தாரா தனுஷை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என தெரிகிறது. காலதாமதம் – தனுஷ் மீது குற்றச்சாட்டு – படத்தின் நீளம் மிக அதிகம் – இது போன்று காரணங்களால் இந்த ஆவணப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் லேடி சூப்பர் ஸ்டார் இந்த கல்யாண வீடியோவை வைத்து 25 கோடி வரை லாபம் பார்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.