கங்குவா விமர்சனம்

 

ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா, வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி ஆகியோர் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ், நடராஜன் சுப்ரமணியம், கயல் தேவராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கங்குவா.

தற்பொழுது கோவாவில் வாழும் சூர்யாவை தேடி ஒரு சிறுவன் வருகிறான். அவனைப் பார்த்ததும் சூர்யாவிற்கு ஒருவித உணர்வு ஏற்படுகிறது அது ஏன் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கங்குவா கதை ஆரம்பமாகிறது.

இயற்கை வளம் அதிகமாக இருக்கும் பெருமாச்சி தீவை கைப்பற்ற முயற்சிக்கிறது ரோமானியப் படை. போர் புரிவதையே தொழிலாக கொண்டிருக்கும் பெருமாச்சி வீரர்களை எளிதில் வெல்வது கடினம் என்பதால், சதி வேலையின் மூலம் அவர்களை வீழ்த்த முடிவு செய்கிறது ரோமானியப் படை. அதற்கு போஸ் வெங்கட் துணை செய்கிறார்.

அதற்காக, மற்றொரு தீவைச் சேர்ந்த நட்டி நட்ராஜுக்கு பணத்தாசைக் காட்டுகிறது. அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு ரோமானியப் படைகளுடன் சேர்ந்து, சதி திட்டம் தீட்டி பெருமாச்சி வீரர்களை கொன்று குவிக்கிறார்.

இதனைக்கண்டு ஆத்திரமடையும் பெருமாச்சி தலைவரின் மகன் சூர்யா, தனது மக்களை கொன்றவர்களை அழிக்க நினைக்கிறார்.

சூர்யா தலைமையிலான பெருமாச்சியை அழிக்க ரோமானியப் படை உதிராவின் உதவியை நாடுகிறது. இரத்தத்தை கடவுளாக வணங்கும் இரக்கமே இல்லாத இனமான உதிராவின் தலைவர் பாபி தியோல், பெருமாச்சியின் மீதான தனது கோபத்தையும், பகைமையையும் தீர்த்துக்கொள்ள, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார்.

அதற்காக, சில தீவுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பெருமாச்சி மீது போர் தொடுக்கிறார்.

அவர்களிடம் இருந்து சூர்யா தன் மக்களை காப்பாற்றினாரா? இல்லையா? நிகழ்கால சூர்யாவுக்கும் அந்த. சிறுவனுக்கும் என்ன தொடர்பு என்ன என்பதே கங்குவா படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : வெற்றி பழனிசாமி
எடிட்டிங் : நிஷாத் யூசுப்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (D’one)