ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில், ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், பூமிகா,நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பிரதர்.
நாயகன் ஜெயம் ரவி சின்ன வயதிலிருந்தே குறும்புக்காரனாக இருந்து வருகிறார். தன் மனதில் எது சரி என்று தோன்றுகிறதோ அதையே செய்து வருகிறார்.
அதனாலேயே ஜெயம் ரவியை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார் அவரது அப்பா. அங்கும் ஜெயம் ரவி செய்யும் செயலால் படிப்பை முடிக்க முடியாமல் பாதியில் விட்டு விடுகிறார்.
அவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டிலும் ஜெயம் ரவியால் பிரச்சனை ஏற்பட, அவரின் அப்பா மன உளைச்சல் ஆளாகி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மருத்துவமனைக்கு அப்பாவை பார்க்க ஊட்டியில் இருந்து வருகிறார் பூமிகா.
தம்பியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் அவனை மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லி தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார் பூமிகா.
ஊட்டியில் பூமிக்காவின் மாமனார் குடும்பத்தினர் டைம் டேபிள் போட்டு அதன்படி வாழ்பவர்கள். அங்கு சென்ற ஜெயம் ரவி பிரியங்கா மோகினை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.
அப்படிப்பட்ட வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவியால் பலவிதமான பெரிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை ஜெயம் ரவி எவ்வாறு சரி செய்தார்? பூமிக்கா தன் அப்பாவிற்கு செய்த சத்தியத்தின் படி ஜெயம் ரவியை மாற்றி காண்பித்தாரா? இல்லையா? என்பதே பிரதர் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : விவேகானந்த் சந்தோஷம்,படத்தொகுப்பு : ஆஷிஷ் ஜோசப்
கலை வடிவமைப்பு : கிஷோர்.ஆர்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
சண்டைப்பயிற்சி : ஸ்டன்னர் சாம்
நடனம் : சாண்டி, சதிஷ் கிருஷ்ணன்
பாடல்கள் : தாமரை, பார்வதி மீரா, தரண்..கே.ஆர், பால் டப்பா (அணிஷ்)
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்