அமரன் விமர்சனம்

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, கீதா கைலாசம், லல்லு,ரவிசங்கர், மிர் சல்மான், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அன்பு தாசன், மைக்கேல் ஆகியோர் நடிப்பில் வெளியாகிருக்கும் படம் ’அமரன்’.

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த சிவகார்த்திகேயனுக்கு சின்ன வயசிலிருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை.

அவரது அம்மாவான கீதாவிற்கு அதில் துளிகூட உடன்பாடு இல்லை என்றாலும்,
அவரது அப்பா அவருக்கு துணையாக இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் சிவகார்த்திகேயன் அங்கு முதலாமாண்டு படிக்கும் கேரள பெண்ணான சாய் பல்லவியிடம் காதலை சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் குடும்பம் காதலை ஏற்றுக்கொள்ள சாய் பல்லவி குடும்பமோ காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, கல்லூரி படிப்பை முடித்த பிறகு சிவகார்த்திகேயனின் ஆசைப்படியே ராணுவத்தில் சேர்கிறார்.

ராணுவத்தில் சேர்ந்த பிறகு ஒருநாள் சிவகார்த்திகேயன் சாய் பல்லவியின் பெற்றோர்களை சந்தித்து பேசி சம்மதம் பெறுகிறார்.

இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அழகான பெண் குழந்தை பிறக்கிறது.

இருவரையும் பிரிந்து, மீண்டும் இராவணுவத்திற்கு சென்று விடுகிறார். இராணுவத்தில் உயர் பதவியை பெறும் சிவகார்த்திகேயன் 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் தலைமை பொறுப்பை ஏற்று, காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலை ஒடுக்க அதி பயங்கர தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார். பிறகு அவனை போலவே வேறு ஒருவன் உருவெடுக்க அவன் சிவகார்த்திகேயனை பழிவாங்க நினைக்கிறான்.

சிவகார்த்திகேயன் அந்த தீவிரவாதியை கொன்றாரா? இல்லையா? என்பதே ‘அமரன்’ படத்தோட மீதிக்கதை.

வழக்கமான ராணுவ படம் படமாக இல்லாமல், தீவிரவாத தாக்குதல், இஸ்லாமியர்களை குறை சொல்லுதல், பஞ்ச் டயலாக்குகள், என இல்லாமல் ஒரு ராணுவ வீரனின் வலிகளை அவன் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படமாக வந்துள்ள படம் தான் இந்த அமரன். இறுதிக் காட்சியின் 15 நிமிடங்கள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ் குமார் ஒளிப்பதிவாளர் : சிஎச் சாய், படத்தொகுப்பாளர் : ஆர்.கலைவாணன்
சண்டை : அன்பறிவு மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர்
புரொடக்‌ஷன் டிசைனர் : ராஜீவன்
கலை இயக்குனர் : சேகர்
தயாரிப்பாளர் : காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட்
வெளியீடு : ரெட் ஜெயண்ட் மூவிஸ்,
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு, S2 மீடியா சதீஷ்.