ஸ்டோரீஸ் பய் தி ஷோர் சார்பில், அனிருத் வல்லப் தயாரிப்பில், ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்கத்தில், விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமசந்திரன் துரைராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராக்கெட் டிரைவர்.
விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் விஷ்வத், ஆனால் அவருடைய ஏழ்மை நிலை அவருடைய கனவை நிறைவேற்ற முடியாமல் செய்கிறது.
அதனால் ஆட்டோ ஓட்டி தனது வாழ்க்கையை நகர்த்துகிறார் நாயகன் விஷ்வத். அவருடைய தோழியாக இருக்கும் சுனைனா போக்குவரத்து காவலராக இருக்கிறார். அவர் மீது அக்கறையும் காட்டுகிறார்.
தன்னுடைய விஞ்ஞானி கனவு நிறைவேறாமல் போனதால் எப்போதும் ஒரு இறுக்கமான மனநிலையுடன் இருக்கிறார் நாயகன் விஷ்வத்.
அப்படி ஒரு நாள் எதேச்சையாக விஸ்வத்தின் ஆட்டோவில் 16 வயது ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பயணிக்கிறார் 1948 இல் இருந்து தற்போது டைம் டிராவல் மூலமாக அப்துல் கலாம் வந்திருப்பதை விஷ்வத் புரிந்து கொள்கிறார்.
1948 இல் இருந்து இப்போது இந்த காலகட்டத்திற்கு வந்ததற்கான காரணம் என்ன என்று தெரியாமல் 16 வயது காலம் தவித்துக் கொண்டிருக்கிறார்.
டைம் ட்ராவல் மூலம் கலாம் வந்ததன் நோக்கம் என்ன? அவர் எதற்காக வந்திருக்கிறார்? அவரின் ஆசை என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற நினைக்கிறார். விஷ்வந்த் அதை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே ராக்கெட் டிரைவர் படத்தோட மீதிக்கதை.
எழுத்து & இயக்கம் : ஸ்ரீராம் ஆனந்தசங்கர்
இசை : கௌஷிக் க்ரிஷ்
தயாரிப்பாளர் : அனிருத் வல்லப்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோரீஸ் பய் தி ஷோர்
ஒளிப்பதிவாளர் : ரெஜிமெல் சூர்யா தாமஸ்
படத்தொகுப்பாளர்: இனியவன் பாண்டியன்
உடை வடிவமைப்பாளர் : ஷில்பா ஐயர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரேம் கருந்தமலை
இணை எழுத்தாளர் : அக்ஷய் பொல்லா
வசனம் : பிரசாந்த் S
தயாரிப்பு நிர்வாகி : செல்வேந்திரன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: யுவராஜ் BV
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்
விளம்பர வடிவமைப்பாளர்: ஸ்ரீ ஹரி சரண்
விளம்பர போஸ்டர்கள் : SMB கிரேஷன்ஸ் & மணிபாரதி செல்வராஜ்