மக்கள் கொண்டாடும் படைப்புகளை, ரசனை மிக்க திரைப்படங்களை வழங்கும், தயாரிப்பாளர்களில் அபிஷேக் நாமாவும் ஒருவர். பான் இந்தியா அளவில் பல பெரிய வெற்றித் திரைப்படங்களை வழங்கி வருகிறார். டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் மூலம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தவர் அடுத்ததாக, நாகபந்தம்- தி சீக்ரெட் ட்ரெஷர் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையையும் அபிஷேக் நாமா எழுதியுள்ளார். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தாராக் சினிமாஸ் உடன் இணைந்து, NIK ஸ்டுடியோவின் முதல் படமாக உருவாகும் இப்படத்தை கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கிறார். இப்படத்தை லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா வழங்குகிறார்கள்.பெத்த கபு ஆக்சன் படத்தின் மூலம் தன் திறமையை நிருபித்த விராட் கர்ணா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்த படம், இன்று படக்குழு மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாகத் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மெகாஸ்டார் சிரஞ்சீவி முஹூர்த்தம் காட்சிக்கு கிளாப் போர்டு அடித்துப் படத்தை துவக்கி வைத்தார். கேமராவை தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் இயக்க, முதல் ஷாட்டை அஜய் பூபதி இயக்கினார். ஏசியன் சுனில் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
அபிஷேக் நாமா ஆன்மீக மற்றும் சாகசங்கள் அடங்கிய சக்திவாய்ந்த ஸ்கிரிப்டை எழுதியுள்ளார். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் புதையல் திறக்கப்பட்டதை அடுத்து, பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள ரத்ன பண்டாரத்தை அடுத்து, மறைந்துள்ள பொக்கிஷங்கள் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்கள் நாகபந்தம் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோவில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச் சுற்றி வருகிறது.
இப்படத்தின் அறிமுக வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இந்த வீடியோவில் கேஜிஎஃப் படத்தில் நடித்த அவினாஷ் அகோராவாக தோன்றுகிறார். இவ்வீடியோ மர்மமான புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. உலகத்தரத்திலான VFX மற்றும் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது.
இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவாளராகவும், அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்தபான் இந்தியப் பிரம்மாண்ட திரைப்படம் மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத்திற்கு, ஒரு ஆழமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். நாகபந்தம் திரைப்படம் 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
இம்மாதம் 23ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள்: விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனங்கள் : NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ்
லக்ஷ்மி ஐரா & தேவன்ஷ் நாம
கதை, திரைக்கதை, & இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்: கிஷோர் அன்னபுரெட்டி
இணை தயாரிப்பாளர்: தாரக் சினிமாஸ்
ஒளிப்பதிவு இயக்குநர்: சௌந்தர் ராஜன் எஸ்
இசை: அபே
இணை தயாரிப்பாளர்: தாரக் சினிமாஸ்
CEO : வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அசோக் குமார்
வசனங்கள்: கல்யாண் சக்ரவர்த்தி
எடிட்டர்: சந்தோஷ் காமிரெட்டி
நிர்வாக தயாரிப்பாளர்: அபிநேத்ரி ஜக்கல்
ஆக்சன் இயக்குநர் : வெங்கட்
டால்பி அட்மாஸ் கலவை: இ.ராதாகிருஷ்ணா d.f. tech
சிறப்பு விளைவுகள்: ஜே.ஆர்.எத்திராஜ்
திரைக்கதை உருவாக்கம்: ராஜீவ் என் கிருஷ்ணா
VFX: தண்டர் ஸ்டுடியோஸ்
விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு : சதீஸ்குமார் ( S2 Media )