ஸ்ரீ சித்ரா பௌர்ணமி பிக்சர்ஸ் சார்பில், வி. மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில், டாக்டர் டிட்டோ, மகேஷ், தீப்ஷிகா, சிம்ரன், சாம்ஸ், மதுமிதா, திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் செல்ல குட்டி.
90 கால கட்டத்தில் நடக்கும் கதை. ஹீரோக்கள் டிட்டோ, மகேஷ் & ஹீரோயின் தீபிக்ஷா ஆகியோர் ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கிறார்கள்.
அப்பா அம்மா இல்லாத மகேஷ் மீது
தீபிக்ஷா இரக்கம் காட்டுகிறார். அதனை காதல் என்று புரிந்துக்கொள்ளும் மகேஷ், அவரை ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஆனால், தீபிக்ஷாவோ, மகேஷின் நண்பரும், குடும்ப உறவினருமான டிட்டோவை ஒருதலையாக காதலிக்கிறார். மகேஷ், தீபிக்ஷாவிடம் தனது காதலை சொல்கிறார், ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் தீபிக்ஷா நிராகரித்து விடுகிறார்.
இந்த விரக்தியில், படிப்பில் கவனம் செலுத்தாத மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, குடி, சிகரெட் என வாழ்க்கையை தொலைத்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். மற்ற அனைவரும் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.
இந்த சமயத்தில், தீபிக்ஷாவின் ஆசைப்படியே டிட்டோவை திருமணம் செய்யும் சூழ்நிலை உருவாகிறது. ஆனால் டிட்டோவோ, நண்பன் காதலித்த பெண்ணை நான் திருமணம் செய்வது நண்பனுக்கு செய்யும் துரோகம், என்று தீபிக்ஷாவை வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.
தான் விருப்பப்பட்டாலும், விருப்பம் இல்லாதவரை மணக்க கூடாது என்று தீபிக்ஷாவும் டிட்டோவை வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.
பிறகு தீபிக்ஷாவும் வேறு ஒருவரை திருமணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. தீபிக்ஷா வேறொருவரை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா? டிட்டோவும், மகேஷும் என்ன ஆனார்கள் என்பதே செல்ல குட்டி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு: ஸ்ரீ சித்ரா பௌர்ணமி
தயாரிப்பாளர் : வி. மணிபாய்
இயக்கம்: சகாயநாதன்
இசை : டி.எஸ். முரளிதரன்,
பின்னணி இசை : சிர்பி
மக்கள் தொடர்பு : ஜே. கார்த்திக்