சட்டம் என் கையில் விமர்சனம்

பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்தியநாராயணன் தயாரிப்பில், சாச்சி இயக்கத்தில், சதீஷ், அஜய் ராஜ், பாவெல் நவகேதன், மைம் கோபி, ரித்திகா, கேபி சதீஷ், வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சட்டம் என் கையில்.

ஏற்காடு பகுதியில் உள்ள மலை பாதையில் உள்ள காவல் நிலையத்தில், உயர் பதவியை அடைவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும், ஈகோ குணம் உடைய பாவெல் நவகீதன், புகார் அளிக்க வருபவர்களிடம் ரௌடித்தனமாக நடந்து கொள்கிறார்.

இரவில் பதட்டத்துடன் கார் ஓட்டி வரும் சதிஷ், எதிரே வரும், பைக் மீது கார் மோத சம்பவ இடத்திலேயே பைக் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட, அந்த உடலை கார் டிக்கியில் போட்டு விட்டு பயத்துடன் வேகமாக செல்ல, சப் இன்ஸ்பெக்டர் பாவெல் நவகீதன்விடம் மாட்டிக்கொள்கிறார்.

சூழ்நிலையை சமாளிக்க தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சதிஷ் சொல்கிறார். சப் இன்ஸ்பெக்டர் சக காவலரிடம் காரை சோதனை செய்ய சொல்லும் போது சதிஷ் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் பாவெல் நவகீதனை அறைந்து விடுகிறார்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், காவலரை அறைந்தற்காகவும் சதஷை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். கூடவே ஓட்டி வந்த காரையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வருகின்றனர்.

கூட வேலை செய்யும் காவலர்கள் முன்னிலையில் தன்னை கன்னத்தில் அறைந்த சதிஷை பழிவாங்க நினைக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் பாவெல் நவகீதன்.

அதே நேரத்தில், ஏற்காடு ரவுண்டானாவில் ஒரு இளம் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தகவல் வர விசாரணைக்கு வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் யார்? சதீஷ் காவல் நிலையம் இருந்து வெளியில் வந்தாரா? இல்லையா? என்பதே சட்டம் என் கையில் படத்தோட மீதீக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

திரைக்கதை & இயக்கம் : சாச்சி
தயாரிப்பாளர்கள் : பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம் மற்றும் ஸ்ரீராம் சத்தியநாராயணன்
ஒளிப்பதிவு : பி.ஜி. முத்தையா
படத்தொகுப்பு : மார்ட்டின் டைட்டஸ் ஏ
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
வசனம் : ஜே.எம்.ராஜா
தயாரிப்பு மேலாளர் : உமாமகேஸ்வர ராஜு
நிர்வாக தயாரிப்பாளர் : பா சிவா
வணிகத் தலைவர் : தினேஷ் குமார்
தயாரிப்பு : சண்முகம் கிரியேஷன்ஸ்
கலை : பசார் என்.கே.ராகுல்
பாடல் வரிகள் : ராகவ கிருஷ்ணன், நவீன் பாரதி சாய் விநாயகம்
சண்டைக்காட்சி : ராம் குமார், சுரேஷ்
ஒலி வடிவமைப்பு : அருண் அக், ராஜா நல்லையா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)