மெய்யழகன் விமர்சனம்

2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில், ஜோதிகா & சூர்யா தயாரிப்பில், சி.பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா, ஸ்வதி காண்டே, தேவதர்சினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீPரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண் சக்தி, ரேச்சல் ரெபேகா, ஆண்டனி , ராஜசேகர் பாண்டியன், இந்துமதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மெய்யழகன்.

1996-இல் பல தலைமுறைகளாக தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து சொந்த பந்தங்களோடு ஆசிரியர் அறிவுடை நம்பி (ஜெயபிரகாஷ்) , வள்ளியம்மாள் (ஸ்ரீரஞ்சனி) தம்பதியின் 18 வயது மகன் அருள்மொழி (இளம் வயது அரவிந்த்சாமி சரண் சக்தி) ஆகியோர் பெரிய வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.

ஒரு சமயத்தில், அண்ணன் தம்பிகளுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டு ஜெயபிரகாஷ் தன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விடுகிறார்.

விருப்பமே இல்லாமல் அவர்களுடன் தஞ்சாவூர் வீட்டை விட்டு செல்ல மனமில்லாமல் சரண் சக்தி சென்ற பிறகு, சொந்தங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு ஊருக்கே வராமல் இருக்கின்றனர்.

அரவிந்த்சாமி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்கும் சித்தி மகள் ஸ்வதி காண்டே திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார். மனைவி தேவதர்ஷினியிடம் திருமண வரவேற்பில் கலந்து விட்டு இரவே சென்னை திரும்பிவிடுவதாக சொல்லிவிட்டுச் செல்கிறார்.

திருமணத்தில் மாமா ராஜ்கிரணும், தங்கை மட்டுமே பாசமாக இருக்கிறார்கள். திருமண வரவேற்பில் சொந்தக்காரராக கார்த்தி அறிமுகமாகிறார். அரவிந்த்சாமி கூடவே இருக்கும் கார்த்திக்கு அவரைப்பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து பேசுகிறார்.

ஆனால் அரவிந்த்சாமிக்கோ கார்த்தி யார் என்றே தெரியாமல் ஒருவித குழப்பத்துடனே பேசி வருகிறார். வரவேற்பு முடிந்துந்தவுடன் அரவிந்த்சாமியை சென்னைக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு அழைத்து வரும் கார்த்தி கடைசி பேருந்தை விட்டு விடுகிறார்.

அதனால் வேறு வழியில்லாமல் கார்த்தியின் வீட்டில் அன்றிரவு அரவிந்த்சாமிகயின் தங்க நேரிடுகிறது. கார்த்தியின் மனைவி ஸ்ரீ திவ்யாவும் அரவிந்த்சாமியை பற்றி தெரிந்தவராக இருக்க, அரவிந்த்சாமிக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட அதன் பிறகு யாரிடமும் சொல்லாமல் அரவிந்த்சாமி ஊரை விட்டு சென்று விடுகிறார். கார்த்தி யார் என்று அரவிந்த்சாமி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மெய்யழகன் படத்துடன் மீதீக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இணை தயாரிப்பாளர் : ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், டிஓபி மகேந்திரன் ஜெயராஜூ
இசை : கோவிந்த் வசந்தா
எடிட்டிங் : ஆர்.கோவிந்தராஜ்
தயாரிப்பு மேற்பார்வை : ராஜீவன்
ஆடை வடிவமைப்பாளர் : சுபஸ்ரீ கார்த்திக் விஜய்
பாடல்கள் : கார்த்திக் நேதா, உமா தேவி, ஸ்டில்ஸ் : ஆகாஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்