இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சிக்ஸர்களுக்கு பெயர் பெற்றவர். அவர் பேட் எடுத்தால் பறப்பது, சிக்ஸர்தான், தற்போது இந்தியனாக ஒரு சூப்பர் சிக்ஸர் அடித்துள்ளார் விராட் கோஹ்லி. கடந்த ஆறு ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். தற்போது ஒப்பந்தம் முடிந்த நிலையில் ஒப்பந்தம் புதுபிக்க எவ்வளவு பணம் கொடுத்ததும் வாங்க வில்லையாம்.
‘ஐ’ படத்தில் விக்ரம் செய்ததை போல் செய்துள்ளார் விராட் கோஹ்லி. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ஒரு பொருளின் விஷதன்மை அதிகரித்தாலோ, தீங்கு விளைவித்தாலோ நான் கண்டிப்பாக வாங்க மாட்டேன், விளம்பரமும் செய்ய மாட்டேன், என்று கூறியுள்ளார். இந்த வெளிபடையான பேச்சால் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. எல்லோரும் விராட்டின் உண்மையான சிக்ஸர் இது தான் என்று புகழ்ந்து வருகின்றனர்.