ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் சி .கே . கரியாலி எழுதிய ” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா


சென்னை, செப்டம்பர்-01 : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் சி .கே . கரியாலி எழுதிய ” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி .ராமசாமி ஐயர் பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது .
இந்நூல் வெளியீட்டு விழாவில் சி.பி. ராமசாமி ஐயர் நந்திதா கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி ” மை மெட்ராஸ்” நூலை பற்றி குறிப்புகள் வழங்கினார். ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான டி.என் வாசுதேவன் நூலை வெளியிட தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் சிவதாஸ் மீனா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் . மேலும் இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்றஐ.ஏ.எஸ் ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் வாசுதேவன்
“மை மெட்ராஸ்” நூலினை பற்றி கூறியதாவது:-
நான் பணி நிமித்தமாக டெல்லிக்கு சென்ற பின்பு மெட்ராஸ் சென்னையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது, ஆனாலும் என் நினைவுகளில் இன்று வரை மெட்ராஸ் என்று சொல்லே நிழலாடி கொண்டிருக்கிறது.

ரயில்,விமானம் பயண சீட்டு வாங்கும் போதும் மெட்ராஸ் என்று உச்சரிப்பு என்னை அறியாமல் என் நாவிலிருந்து வெளிவரும்.

பழமை மாறாது, புதுமையான அழகான மெட்ராஸ் இன்று கண்கொள்ளா வளர்ச்சியை கண்டு பிரமிக்கிறேன் .
வட மாநிலங்களில் யாராவது எந்த ஊர் என்று கேட்கும் போது மெட்ராஸ் என்று தான் கூறுவேன்.
கொச்சிகாரரும்,மைசூர் காரரும் ஹைதராபாத்காரும் வட இந்தியருக்கு மதராஸிகளே.
இவ்வளவு பெருமை வாய்ந்த மெட்ராஸ்க்கு ஒரு காஷ்மீர் பெண்மணி “மை மெட்ராஸ்” நூலினை எழுதி பெருமை படுத்தியிருக்கிறார்.

கரியாலி நிறைய புத்தகங்களை எழுதி இருக்கிறார் .இதில் குறிப்பாக மகளிர் மேம்பாடு,பெண்ணுரிமை பற்றி நிறைய உண்டு . இவருடைய நூல்களை வாசித்தப்
பின்பு தான் ஈக்விடாஸ் ஸ்மால் பைன்னால் வங்கி தொடங்க எண்ணம் வந்தது. என்னை ஈர்த்த இவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்ததேன். நான் சந்திக்க வந்த டிசம்பர் 31, 2007 அன்று தான் கரியாலி தமிழக ஆளுநர் மாளிகையின் கூடுதல் செயலாளாராக இருந்து ஓய்வு பெறுகிறார் . அன்று அவரை சந்திக்க இயலவில்லை . மறுநாள் 2008 புத்தாண்டு அன்று
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன் என்றார்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் சிங் தாஸ் மீனா பேசியதாவது:-

இந்த “மை மெட்ராஸ்” நூலினை கையில் எடுக்கும் போது மெட்ராஸின் பாரம்பரியமான ஸ்பென்சர் கட்டிடம் நினைவுக்கு கொண்டு வருகிறது. மேலும் மதராஸின் பண்பாட்டு சின்னங்களாக விளங்கும் ஆன்மீக தலங்கள், நாட்டியம், கலை, பொழுதுபோக்கு இடங்கள் பற்றியும், மண் சார்ந்த மக்களைப் பற்றியும் தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார்.

இந் நூல் இன்றைய இளையவர்களுக்கு பழமையான மெட்ராஸ் பற்றி தெரிந்து கொள்ளும் கால சுவடாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என்றார்..