ரகு தாத்தா விமர்சனம்

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ஜெயக்குமார், ஆனந்த சாமி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரகு தாத்தா.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்ற காலத்தில் நடக்கின்ற கதை. நாயகி கீர்த்தி சுரேஷ், தனது தாத்தா எம்எஸ் பாஸ்கர் உடன் சேர்ந்து இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

வங்கி வேலை செய்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் கா பாண்டியன் என்ற புணை பெயரில் எழுத்தாளராகவும் இருக்கிறார். பெரியாரின் கொள்கையை பின்பற்றுபவராகவும் இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் மீதும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். பார்க்கும் வரங்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு, திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டும் இருக்கிறார்.

இந்நிலையில் எம் எஸ் பாஸ்கருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவர தனது ஆசையாக கீர்த்தி சுரேஷ் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று எம் எஸ் பாஸ்கர் கூறி விடுகிறார். அதனால் கீர்த்தி சுரேஷுக்குமாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் அதனால் வேறு வழி இன்றி வேறு யாரையயோ திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தன்னுடைய புத்தகங்களை வாசிப்பவரும், பெண்களை மதிப்பவருமான ரவீந்திர விஜயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் சொல்கிறார். வீட்டிலும் அவரின் முடிவை ஏற்றுக்கொண்டு நிச்சயதார்த்தத்தை நடத்துகிறார்கள்.

நிச்சயதார்த்தம் நடந்து சில நாட்களில் ரவீந்திர விஜயின் கேவலமான சுயரூபம் கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வருகிறது.

இதனால் ரவீந்திர விஜயை திருமணம் செய்து கொள்ள பிடிக்காமல் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு என்ன நடந்தது? ரவீந்திர விஜயின் சுயரூபம் என்ன? கீர்த்தி சுரேஷ் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ரகு தாத்தா படத்தின் மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுதி இயக்கியவர் : சுமன் குமார்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : விஜய் சுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்

நிர்வாக தயாரிப்பாளர் : ரியா கொங்கரா

இணை இயக்குனர் : துர்கேஷ் பிரதாப் சிங்

ஒளிப்பதிவு இயக்குனர் : யாமினி யக்ஞமூர்த்தி

படத்தொகுப்பு : டி.எஸ். சுரேஷ்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : ராம்சரந்தேஜ் லபானி

விளம்பர எடிட்டர் : ஸ்னீக் பீக்

ஆடியோகிராஃபர்கள் : ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, எஸ். சிவகுமார் (ஏஎம் ஸ்டுடியோஸ்)

ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா

கீர்த்தியின் ஆடை வடிவமைப்பாளர் : ஸ்ருதி மஞ்சரி

வசனம் : மனோஜ் குமார் கலைவாணன்

போஸ்ட் புரொடக்ஷன் சூப்பர்வைசர் : ஓ.கே. விஜய்

விளம்பர வடிவமைப்பாளர் : ஜெயன்

ஸ்டில் போட்டோகிராபர் : விஷ்ணு எஸ் ராஜன்

க்கள் தொடர்பு : யுவராஜ்