தங்கலான் விமர்சனம்

கே.ஈ.ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித், ஜோதி தேஷ்பாண்டே தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனியல் கால்டாகிரோன், ஹரி கிருஷ்ணன் அன்புதுரை, சம்பத் ராம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தங்கலான்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வட ஆற்காட்டில் உள்ள வேப்பூரில் நடக்கிறது கதை.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதி குடி மக்கள் அனைவரும் தங்களுடைய நிலங்களை ஜமினிடம் கொடுத்துவிட்டு அதே நிலங்களில் வேலை செய்யும் அடிமைகளாக இருக்கிறார்கள்.
விக்ரம் மட்டும் தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத ஜமீன்தார் விக்ரமின் நிலத்திற்கு நெருப்பு வைத்து சதி செய்துவிட்டு விக்ரமிடமிருந்து நிலத்தை அபகரித்து அவரையும் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளையும் பண்ணையில் அடிமைகளாக வேலை செய்ய வைக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஓரிடத்தில் தங்கம் இருப்பதாக நினைக்கும் பிரிட்டிஷ் அதிகாரி அந்த தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதற்காக அங்கு வேலை செய்வதற்காக விக்ரமின் மக்களை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.

அங்கு வேலை செய்ய வந்தால் கிடைக்கின்ற தங்கத்தில் பங்கு தருவதாகவும், தினமும் கூலியும் சாப்பாடும் தருகிறோம் என்று சொல்லி அழைக்கிறார்கள்.

ஆனால் அங்குள்ள மக்கள் அந்த இடத்தில் ஆபத்திருப்பதால் யாரும் வரவில்லை என்று சொல்கின்றனர். ஆனால் விக்ரம் இந்த பண்ணையில் இவர்களிடம் அடிமைகளாக வாழ்வதைவிட தங்கம் தேடி சென்று நம் வாழ்க்கையை மீட்டெடுக்கலாம் அதற்கு ஒரு வாய்ப்பாக அமையும், இல்லை என்றால் சுயமரியாதையோடு இறந்து விடலாம் என்று சொல்லிவிட்டு விக்ரமும் விக்ரமுடன் சேர்ந்து ஒரு நான்கு ஐந்து பேரும் அங்கு செல்ல தயாராகிறார்கள்.

பிரிட்டிஷ் அதிகாரியின் தலைமையில் விக்ரம் உடைய ஆட்களும் சேர்ந்து ஒரு குழுவாக தங்கத்தை தேடி பயணிக்கிறார்கள். அவர்களின் பயணத்தில் என்ன நடந்தது? அவர்கள் தேடிச் சென்ற தங்கம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறார்கள்? என்பதே தங்கலான் படத்தோட கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை : பா.ரஞ்சித், தமிழ் பிரபா
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : ஏ. கிஷோர் குமார்
படத்தொகுப்பு : செல்வா ஆர்.கே
கலை இயக்குனர் : எஸ் எஸ் மூர்த்தி
அதிரடி : ஸ்டன்னர் சாம்
பேனர் : ஸ்டுடியோ கிரீன்
தயாரிப்பாளர்கள் : கே.ஈ.ஞானவேல்ராஜா, பா.ரஞ்சித், ஜோதி தேஷ்பாண்டே
எழுத்து & இயக்கம் : பா ரஞ்சித்
மக்கள் தொடர்பு : யுவராஜ், குணா