மின்மினி விமர்சனம்

மனோஜ் பரமஹ தயாரிப்பில், ஹலிதா ஷமீம் இயக்கத்தில், சபரி, பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மின்மினி.

ஊட்டியில் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வரும் கௌரவ் காளை பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் இருக்கிறார்.

அதே பள்ளியில் நியூ அட்மிஷன் ஆக சேரும் பிரவீன் கிஷோரை அடிக்கடி ஜாலிக்காக வம்பு இழுக்கிறார், அவருடன் நட்பாக இருக்கவும் விரும்புகிறார்.

ஆனால் அதனைப் புரிந்து கொள்ளாத பிரவீன் கிஷோர் எப்பவும் அமைதியாகவும் யாருடனும் பேசாமலும் விலகியே இருக்கிறார்.

ஒருநாள் மாணவர்கள் அனைவரும் கல்விச் சுற்றுலா செல்வதற்காக ஒரு வாகனத்தில் பயணிக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் வாகனம் விபத்துக்குள்ளாகும் போது அனைவரையும் காப்பாற்றும் கௌரவ் காளை பிரவீன் கிஷோரை காப்பாற்றும் முயற்சியில் தலையில் அடிபட்டு இறந்து விடுகிறார்.

கௌரவ் காளையின் இறப்புக்குப் பிறகு தன்னுடன் நட்பாக இருக்க விரும்பியதை தெரிந்து கொள்ளும் பிரவீன் கிஷோர், ரொம்பவும் மனவேதனைப்படுகிறார். பிறகு தன்னுடைய வாழ்க்கையை விட்டுவிட்டு கௌரவ் காளையின் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்.

கௌரவம் காளையின் உடல் உறுப்பு தானமாக கொடுக்கப்படுகிறது. அவரின் உடல் உறுப்பு தானத்தால் உயிர்பிழைக்கும் எஸ்தர் அனில், புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். கௌரவ் காளைக்கு நன்றி கூறும் வகையில் அவருடைய எதிர்கால ஆசைகளை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவர் படித்த ஊட்டி பள்ளியிலேயே படிக்க செல்கிறார்.

அங்கு கௌரவ் காளையின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரவீன் கிஷோரின் நிலையை பார்த்து அதிர்ச்சியடையும் எஸ்தர் அனில் அதிலிருந்து அவரை மீட்க முயற்சி செய்கிறார். அதற்காக அவருடைய பள்ளி வாழ்க்கையையும் தாண்டி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பிரவீன் கிஷோரும், எஸ்தர் அனிலும் நண்பர்கள் ஆனார்களா? எஸ்தர் அனிலின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே மின்மினி படத்தோட மீதிககதை.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் : ஹலிதா ஷமீம்.
ஒளிப்பதிவாளர் : மனோஜ் பரமஹம்சா
இசையமைப்பாளர் : கதீஜா ரஹ்மான்
எடிட்டர் : ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா
கலை இயக்குனர் : செரிங் குர்மெட் குங்கியம்
தயாரிப்பு ஒலி கலவை : ராகவ் ரமேஷ்
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் : லிங்கின் லிவி
ஒலி வடிவமைப்பு : அழகியகூத்தன், சுரேன்.ஜி
வண்ணக்கலைஞர் : நேசிகா ராஜகிமாறன்
மறுபதிவு கலவைகள் : எஸ்.சிவகுமார், கிருஷ்ணன் சுப்ரமணியன்
லைன் புரொட்யூசர் : ஸ்டான்சின் டோர்ஜாய் கியா
நிர்வாகத் தயாரிப்பாளர் : கே.ஜெயசீலன்
தயாரிப்பாளர்கள் : மனோஜ் பரமஹ
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்