தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ராயன்.
சிறு வயதில் தனுஷிடம் தனுஷின் பெற்றோர் சந்தைக்கு போயிட்டு சாயந்திரத்துக்குள் வீடு வந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு போகின்றனர், ஆனால் திரும்பி வரவில்லை.
இதனால் ஊர் சாமியாரிடம் காணாமல் போன அம்மா அப்பாவை பற்றி கூறி அவருடைய வீட்டில் இரவு தங்குகிறார்கள். அந்த சமயத்தில் அந்த சாமியார் தனுஷின் தங்கையை விற்று பணம் சம்பாதிக்க நினைக்கும் போது, அவரை கொன்றுவிட்டு தம்பிகள் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கை துஷாரா விஜயனை அழைத்து கொண்டு ஒரு வண்டியில் ஏறி சென்னைக்கு வந்து விடுகிறார்.
சென்னையில் செல்வராகவனின் உதவியை பெறுகின்றனர் செல்வராகவன் ராயனுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்து தங்குவதற்கான ஏற்பாடையும் செய்கிறார்.
தனுஷ் தன்னுடைய கடின உழைப்பால் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி தம்பி தங்கையே வளர்த்து வருகிறார் முதல் தம்பியான சந்தீப் கிஷன் வேலை வெட்டி இல்லாமல் குடித்துக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டும் வாழ்ந்து வருகிறார். சந்தீப் கிஷன் காதலியாக அபர்ணா பால முரளி. இரண்டாவது தம்பி காளிதாஸ் ஜெயராமன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரி தேர்தலில் நிற்கும் போது பிரச்சனை ஏற்படுகிறது. தங்கை துஷாரா விஜயன் வீட்டில் வேலைகளை செய்து கொண்டும் அண்ணனுக்கு துணையாகவும் இருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று தனுஷ் ஆசைப்படுகிறார் அதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்.
தனுஷ் வசிக்கும் பகுதியை எஸ் ஜே சூர்யா மற்றும் சரவணன் என்ற ரவுடிகள் அந்த பகுதியை ஆளுகின்றனர்.
போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யாவையும் சரவணனையும் பழிவாங்க நினைக்கிறார். அதற்காக இரண்டு பேருக்கும் இடையே அவர்களுக்கே தெரியாமல் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
அப்படியே அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் எதிர்பாராத விதமாகவும் தனுஷின் தம்பியான சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார்.
தம்பியை காப்பாற்றுவதற்காக தனுஷ் சரவணன் மற்றும் அவரின் அடியாட்களை கொலை செய்து கையில் கத்தியை எடுக்கிறார்.
இதன் பிறகு தனுஷின் வாழ்க்கை என்னவானது? தங்கையின் திருமணம் நடைபெற்றதா? இல்லையா? சந்தீப் கிஷனும், காளிதாஸ் ஜெயராமனும் தனுஷுக்காக என்ன செய்தார்கள்? என்பதே ராயன் படத்தோட மீதி கதை
படக்குழு :
எழுத்தாளர்-இயக்குனர் : தனுஷ்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : கலாநிதி மாறன்
இசை : ஏ. ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : பிரசன்னா
நடன இயக்குனர் : பிரபு தேவா, பாபா பாஸ்கர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜாக்கி
பாடலாசிரியர் : கவிஞர் தனுஷ், கானா கதர், அறிவு
ஆடை வடிவமைப்பாளர் : காவ்யா ஸ்ரீராம்
சண்டைப் பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
ஒப்பனை : பி. ராஜா
படங்கள் : தேனி முருகன்
விளம்பரம் : சிவம் சி. கபிலன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ரமேஷ் குச்சிரையார்
நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் சீனிவாசன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது